ரூ.5.39 லட்சம் ஆரம்ப விலையில் துவங்குகின்ற பிஎஸ்6 ஃபோர்டு ஃபிகோ காரின் விலை ரூ.11,000 வரை உயர்ந்திருப்பதுடன், ரூ.5.89 லட்சத்தில் வந்துள்ள ஃபோர்டு ஃபீரிஸ்டைல் மாடலின் டாப் வேரியண்ட் ரூ.27,000 வரை குறைக்கப்பட்டுள்ளது. பிஎஸ்6 என்ஜின் பெற்ற ஆஸ்பயர் செடான் விலையும் குறைந்துள்ளது.
மூன்று கார்களிலும் பொருத்தப்பட்டுள்ள 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பிஎஸ்6 நுட்பவிபரம் பின்வருமாறு:-
புதிய 1.2 லிட்டர் டிராகன் சீரிஸ் பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 95 பிஎச்பி பவரையும், 119 என்எம் டார்க் திறனையும் வழங்குகின்றது. இதில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கிடைக்கும். முன்பாக இந்த என்ஜின் 120 என்எம் டார்க் வழங்கி வந்தது.
டீசல் என்ஜின் தேர்வில் 99 பிஎச்பி பவரையும், 215 என்எம் டார்க் திறனையும் வழங்கவல்ல 1.5 லிட்டர் டீசல் என்ஜின் , 5 வேக மேனுவல் கியர்பாக்ஸை கொண்டதாக உள்ளது.
மூன்று மாடல்களும் இப்போது ஃபோர்டு பாஸ் எனப்படும் ஃபோர்டின் கார் இணைப்புத் தொகுப்பை (car connectivity suite) அனைத்து வேரியண்டிலும் பெறுகின்றது. ஆறு ஏர்பேக்குகள், ஆன்-போர்டு நேவிகேஷன் கூடிய தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், தானியங்கி ஹெட்லைட் மற்றும் வைப்பர், கீலெஸ் என்ட்ரி மற்றும் கோ மற்றும் ரியர் வியூ கண்ணாடியின் உள்ளே ஒரு ஆட்டோ மங்கலாக்கும் முறை ஆகியவை இப்போது டாப் டிரிம்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
ஃபோர்டு இப்போது தனது பிஎஸ்6 மாடல்களான ஃபிகோ, ஆஸ்பயர், மற்றும் ஃபீரிஸ்டைல் கார்களுக்கு 3 ஆண்டு அல்லது 1 லட்சம் கிலோமீட்டர் உத்தரவாதம் வழங்குகின்றது.
BS6 Ford Aspire Price list
Aspire Variants | விலை BS-VI | விலை BS-IV | வித்தியாசம் |
---|---|---|---|
1.2l Ambiente | INR 599,000 | INR 598,500 | INR 500 |
1.2l Trend | INR 659,000 | INR 663,400 | INR -4,400 |
1.2l Titanium | INR 709,000 | INR 737,400 | INR -28,400 |
1.2l Titanium+ | INR 744,000 | INR 782,400 | INR -38,400 |
1.5l Trend | INR 749,000 | INR 737,400 | INR -11,600 |
1.5l Titanium | INR 799,000 | INR 817,400 | INR -18,400 |
1.5l Titanium+ | INR 834,000 | INR 862,400 | INR -28,400 |
BS6 Ford Figo Price list
Figo Variants | விலை BS-VI | விலை BS-IV | வித்தியாசம் |
1.2l Ambiente | INR 539,000 | INR 523,000 | INR -16,000 |
1.2l Trend (புதிது) | INR 599,000 | NA | NA |
1.2l Titanium | INR 635,000 | INR 599,900 | INR 35,100 |
1.2l Titanium Blu | INR 695,000 | INR 664,900 | INR 30,100 |
1.5l Trend (புதிது) | INR 686,000 | NA | NA |
1.5l Titanium | INR 725,000 | INR 689,900 | INR 35,100 |
1.5l Titanium Blu | INR 785,000 | INR 754,900 | INR 30,100 |
FORD FREESTYLE BS6 price list
Freestyle Variants | விலை BS-VI | விலை BS-IV | வித்தியாசம் |
1.2l Ambiente | INR 589,000 | INR 591,400 | INR -2,400 |
1.2l Trend | INR 644,000 | INR 681,400 | INR -37,400 |
1.2l Titanium | INR 694,000 | INR 721,400 | INR -27,400 |
1.2l Titanium+ | INR 729,000 | INR 756,400 | INR -27,400 |
1.5l Trend | INR 734,000 | INR 745,900 | INR -11,900 |
1.5l Titanium | INR 784,000 | INR 790,900 | INR -6,900 |
1.5l Titanium+ | INR 819,000 | INR 836,900 | INR -17,900 |
ஃபிகோ, ஆஸ்பியர் மற்றும் ஃப்ரீஸ்டைல் ஆகியவை பாதுகாப்பின் அடிப்படையில் மிக சிறப்பானவையாக உள்ளன. ஏனெனில், இவற்றின் டாப் வேரியண்டில் 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் உடன் இபிடி, ஹில் லான்ச் அசிஸ்ட் (HLA), எலக்ட்ரானிக் ஸ்திரத்தன்மை திட்டம் (ESP), மின்சார சக்தி உதவி ஸ்டீயரிங் ( EPAS), ரியர்-வியூ கேமரா, அதிவேக எச்சரிக்கை அமைப்பு, அலாரம் மற்றும் எஞ்சின் இம்மொபைல்ஸர்.