ஃபோர்டு ஃபீரிஸ்டைல் காரில் கூடுதலான வதிகள் பெற்றதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஃபிளேயர் எடிசன் விலை ரூ.7.69 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.8.79 லட்சம் வரை நிர்ணையிக்கப்பட்டுள்ளது. இது டைட்டானியம்+ வேரியண்டை விட ரூ.30,000 வரை கூடுதலாக அமைந்துள்ளது.
கோல்டு, வெள்ளை மற்றும் கிரே என மூன்று நிறங்களில் கிடைக்க உள்ள போர்டு ஃபீரிஸ்டைல் ஃபிளேயர் ஸ்பெஷல் எடிசனின் தோற்றத்தில் கதவு மற்றும் டெயில்கேட்டில் புதிய பாடி கிராபிக்ஸ், ரூஃப் ரெயில், ORVM-களில் சிவப்பு நிறம், அலாய் வீல் மற்றும் மேற்கூறையில் கருப்பு நிறம் உள்ளது. இன்டிரியரில் “Flair” பேட்ஜ் பெற்ற இருக்கைள், சிவப்பு மற்றும் கருப்பு நிறத்திற்கு அதிக முக்கியத்துவம் பெற்ற கேபினை பெற்றுள்ளது.
6 ஏர்பேக்குகளை பெற்ற இந்த காரில் 7.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இணைக்கப்பட்டு, ஃபோர்டு பாஸ் கனெக்ட்டிவிட்டி ஆப்ஷனும் இணைக்கப்பட்டுள்ளது. ஆட்டோமேட்டிக் ஹெட்லைட், வைப்பர், ஆட்டோ ஏசி மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா இடம்பெற்றுள்ளது.
ஃபோர்டு ஃபீரிஸ்டைலில் 1.2 லிட்டர் டிராகன் சீரிஸ் பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 95 பிஎச்பி பவரையும், 119 என்எம் டார்க் திறனையும் வழங்குகின்றது. இதில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கிடைக்கும். முன்பாக இந்த என்ஜின் 120 என்எம் டார்க் வழங்கி வந்தது.
டீசல் என்ஜின் தேர்வில் 99 பிஎச்பி பவரையும், 215 என்எம் டார்க் திறனையும் வழங்கவல்ல 1.5 லிட்டர் டீசல் என்ஜின் , 5 வேக மேனுவல் கியர்பாக்ஸை கொண்டதாக உள்ளது.
1.2-litre TiVCT Petrol MT – ரூ. 7.69 லட்சம்
1.5-litre TDCi Diesel MT – ரூ. 8.79 லட்சம்
(அறிமுக விலை, எக்ஸ்ஷோரூம் இந்தியா)