விற்பனையில் உள்ள ஹூண்டாய் எலன்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் காரில் இடம்பெற உள்ள 1.5 லிட்டர் பிஎஸ்-6 டீசல் இன்ஜின் விபரத்தை ஹூண்டாய் நிறுவனம் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது.

முன்பாக விற்பனை செய்யப்பட்ட எலன்ட்ரா காரின் S வேரியண்ட் நீக்கப்பட்டிருப்பதாலும் மற்றபடி இரண்டு வேரியண்டுகளில் SX மற்றும் SX(O) கிடைக்கின்றது. இந்த காரின் ஆப்ஷனல் வேரியண்டில் மட்டும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது.

முந்தைய 1.6 லிட்டர் டீசல் என்ஜின் நீக்கப்பட்டு, இப்போது 1.5 லிட்டர் டீசல் அதிகபட்சமாக 115 PS பவரில் 4000 RPM-ல் மற்றும் 250 Nm டார்க் 1500-2750 RPM-ல்  வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.

ஆறு ஏர்பேக்குகள், ரியர்-வியூ கேமரா, ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப், சன்ரூஃப், டூயல் ஏசி கட்டுப்பாடு, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளேவுடன் 8.0 அங்குல தொடுதிரை இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ப்ளூ லிங்க் இணைக்கப்பட்ட கார் தொழில்நுட்பம் போன்றவற்றை பெற்றுள்ளது.

ஹூண்டாய் எலன்ட்ரா காரை இந்திய சந்தையில் ஹோண்டா சிவிக், ஸ்கோடா ஆக்டாவியா போன்ற பிரபலமான செடான் ரக மாடல்களை எதிர்கொள்ளுகின்றது.