Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

2019 ஹூண்டாய் எலன்ட்ரா (ஃபேஸ்லிஃப்ட்), விலை 15.89 லட்சம் ரூபாயில் தொடங்குகிறது

by automobiletamilan
October 4, 2019
in கார் செய்திகள்

2019 hyundai elantra

இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள மேம்பட்ட 2019 ஹூண்டாய் எலன்ட்ரா விலை ரூ. 15.89 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ. 20.39 லட்சத்தில் நிறைவடைகின்றது. இந்த காரில் ஹூண்டாய் ப்ளூலிங்க் டெக்னாலாஜி, பிஎஸ் 6 மாசு உமிழ்வுக்கு இணையான 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது.

2.0 லிட்டர் நான்கு சிலிண்டர் எஞ்ஜின் ஆற்றல் 152 hp மற்றும் டார்க் 190 Nm ஆகும். 1.6 லிட்டர் CRDi என்ஜின் ஆற்றல் 126 hp மற்றும் டார்க் 265 Nm ஆகும்.  இரு என்ஜின் ஆப்ஷனிலும் 6 வேக மெனுவல் கியர்பாக்ஸ் மற்றும் டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனலாக கிடைக்கும்.

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி காரில் முதன்முறையாக இடம்பெற்ற கனெக்ட்டிவிட்டி அம்சமான ஹூண்டாய் ப்ளூலிங்க் நுட்பத்தை பெற்றுள்ள இந்த மாடலில் வோடபோன் இசிம் கார்டு மூலம் பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகளை பெற வழிவகுக்கின்றது. ப்ளூ, சில்வர், ஒயிட், பிளாக் மற்றும் ரெட் என 5 இரு நிறங்களை பெற்றுள்ள எலன்ட்ரா காரின் தோற்ற அமைப்பில் தொடர்ந்து தனது பாரம்பரிய கிரிலை வழங்கி, புதிய ஹெட்லைட், எல்இடி ரன்னிங் விளக்குகள், முக்கோன வடிவ பனி விளக்கு, புதிய தோற்றத்தை வழங்கும் அலாய் வீல் மற்றும் டெயில் விளக்கு உட்பட ரியர் பூட் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

முந்தைய மாடலை விட பல்வேறு பிரீமியம் வசதிகளை பெற உள்ள இந்த காரின் இன்டிரியரில் 8.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ப்ளூலிங்க் நுட்பம் எனப்படுகின்ற கனெக்ட்டிவிட்டி அம்சங்கள் இடம்பெற வாய்ப்புகள் உள்ளது. அனைத்து மாடல்களில் மாடல்களில் அதிகபட்சமாக 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ், இபிடி உட்பட பல பாதுகாப்பு வசதிகள் சிறப்பான அளவில் வழங்கப்பட்டுள்ளது.

ஹூண்டாய் எலன்ட்ரா காரை இந்திய சந்தையில் கரோல்லா அல்டிஸ், ஹோண்டா சிவிக், ஸ்கோடா ஆக்டாவியா போன்ற பிரபலமான செடான் ரக மாடல்களை  எதிர்கொள்ளுகின்றது.

2019 Hyundai Elantra S ரூ. 15,89,000

SX INR 18,49,000

SX AT INR 19,49,000

SX (O) AT INR 20,39,000

(எக்ஸ்-ஷோரூம் இந்தியா)

2019 ELANTRA

Tags: Hyundai Elantraஹூண்டாய் எலன்ட்ரா
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version