விரைவில்., 2019 ஹூண்டாய் எலன்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு அறிமுகம்

2019 hyundai elantra

வரும் அக்டோபர் 3 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள 2019 ஹூண்டாய் எலன்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் மாடல் தோற்ற அமைப்பு மற்றும் இன்டிரியரில் பல்வேறு மேம்பாடுகளுடன் வரவுள்ளது. மேலும், எலன்ட்ராவிற்கு நாடு முழுவதும் உள்ள ஹூண்டாய் டீலர்கள் மூலம் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

விற்பனைக்கு வரவுள்ள புதிய மாடலில் தொடர்ந்து முந்தைய 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.6 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். பிஎஸ் 6 மாசு உமிழ்வுக்கு இணையாக வரவுள்ள என்ஜின் இடம்பெற்றிருக்கும். 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர் எஞ்ஜின் ஆற்றல் 152 hp மற்றும் டார்க் 190 Nm ஆகும். 1.6 லிட்டர் CRDi என்ஜின் ஆற்றல் 126 hp மற்றும் டார்க் 265 Nm ஆகும்.  இரு என்ஜின் ஆப்ஷனிலும் 6 வேக மெனுவல் கியர்பாக்ஸ் மற்றும் டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனலாக கிடைக்கும்.

தோற்ற அமைப்பில் தொடர்ந்து தனது பாரம்பரிய கிரிலை வழங்கி, புதிய ஹெட்லைட், எல்இடி ரன்னிங் விளக்குகள், முக்கோன வடிவ பனி விளக்கு, புதிய தோற்றத்தை வழங்கும் அலாய் வீல் மற்றும் டெயில் விளக்கு உட்பட ரியர் பூட் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

முந்தைய மாடலை விட பல்வேறு பிரீமியம் வசதிகளை பெற உள்ள இந்த காரின் இன்டிரியரில் 8.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ப்ளூலிங்க் நுட்பம் எனப்படுகின்ற கனெக்ட்டிவிட்டி அம்சங்கள் இடம்பெற வாய்ப்புகள் உள்ளது. டாப் மாடல்களில் அதிகபட்சமாக 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ், இபிடி உட்பட சர்வதேச அளவில் வழங்கப்பட்டுள்ள ஆட்டோமேட்டிக் எமெர்ஜென்சி பிரேக் வசதி இந்தியாவில் கொண்டு வர வாய்ப்புகள் குறைவுதான்.

2019 ELANTRA

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற கரோல்லா அல்டிஸ், ஹோண்டா சிவிக், ஸ்கோடா ஆக்டாவியா போன்ற பிரபலமான செடான் ரக மாடல்களை இந்த கார் எதிர்கொள்ள உள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *