டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் அடிப்படையில் ₹24.79 லட்சம் ஆரம்ப விலையில் மாருதி சுசூகி இன்விக்டோ விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. மிக சிறப்பான இடவசதி பெற்ற 7 இருக்கை மற்றும் 8 இருக்கை ஹைபிரிட் எம்பிவி காராக விளங்குகின்றது.
இந்தியாவில் மாருதியின் பிரீமியம் டீலராக உள்ள நெக்ஸா ஷோரூம் துவங்கப்பட்டடு 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் 8வது மாடலாக இன்விக்டோ வெளியாகியுள்ளது. மேலும், இந்நிறுவனம் 2030 ஆம் ஆண்டிற்கு 6 எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
இன்விக்டோ காரில் ஒற்றை ஹைபிரிட் 183.7 hp பவர் வழங்கும் 2.0 லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட் பவர்டிரெய்ன் கொண்டதாக வந்துள்ளது. இந்த என்ஜின் ஆட்டோமேட்டிக் eCVT கியர்பாக்ஸ் பெற்று மட்டுமே வருகின்றது.
0-100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 9.6 வினாடிகள் எடுத்துக் கொள்ளுகின்றது. இன்விக்டோ காரின் மைலேஜ் 23.24 Kmpl ஆகும்.
மாருதி சுசூகி இன்விக்டோ காரின் தோற்ற அமைப்பில் மிக முக்கியமாக முன்புற கிரில் அமைப்பு ஆனது கிராண்ட் விட்டாரா காரில் உள்ளதை போன்றே கொடுக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்ட பம்பர், எல்இடி ஹெட்லைட் ஆகியவற்றில் மாறுதல் பெற்று சுசூகி லோகோ இடம்பெற்றுள்ளது. பக்கவாட்டில் எந்த மாற்றமும் இல்லை, டூயல் டோன் அலாய் வீல் பெற்று பின்புறத்தில் சுசூகி லோகோ வழங்கப்பட்டு நேர்த்தியான எல்இடி டெயில் லைட் உள்ளன. இந்த மாடலில் நீலம், வெள்ளை, சிலவர் மற்றும் கிரே என நான்கு விதமான நிறங்கள் உள்ளது.
இன்விக்டோ காரின் பரிமாணங்கள் 4755mm நீளம், 1850mm அகலம் மற்றும் உயரம் 1795mm ஆகவும், 2850mm வீல்பேஸ் பெற்றுள்ளது. 17 அங்குல அலாய் வீல் உள்ளது. இந்த காரில் 239 லிட்டர் பூட் ஸ்பேஸ் உள்ளது மற்றும் மூன்றாவது வரிசையை மடித்தால் 690 லிட்டர் வரை விரிவாக்கலாம்.
பழுப்பு நிறத்திற்கு பதிலாக கருப்பு வண்ணத்தை பெற்றுள்ள மாருதி இன்விக்டோ இன்டிரியரில் 7 மற்றும் 8 இருக்கை கொண்டதாக உள்ளது. பாதுகாப்பு சார்ந்த அம்சங்களில் ஆறு ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், 360 டிகிரி கேமரா ஆகியவற்றை பெற்றுள்ளது.
10.1 இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு 50க்கு மேற்பட்ட சுசூகி கனெக்டேட் வசதிகளை கொண்டிருக்கும். டூயல் ஜோன் ஏசி கட்டுப்பாடு, பனோரமிக் சன்ரூஃப், காற்றோட்டமான முன் இருக்கைகள் மற்றும் ஒட்டோமான் கூடிய பவர் கேப்டன் இருக்கைகள், எலக்ட்ரிக் டையில்கேட் பெற்றுள்ளது.
மாருதி சுசூகி இன்விக்டோ விலை பட்டியல்
- Invicto 7 Seater Alpha+ ₹ 24.79 லட்சம்
- Invicto 8 Seater Zeta – ₹ 24.84 லட்சம்
- Invicto 7 Seater Zeta – ₹ 28.42 லட்சம்