மாருதி சுசூகி வெளியிட்டுள்ள புதிய இன்விக்டோ பிரீமியம் எம்பிஇவி மாடல் விற்பனையில் உள்ள டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் அடிப்படையிலான ஹைபிரிட் என்ஜின் பெற்று Alpha+, zeta+ (8 Seater) மற்றும் Zeta+ (7 Seater) மூன்று விதமான வேரியண்டில் கிடைக்கின்றது.
183.7 hp பவர் வழங்கும் 2.0 லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட் பவர்டிரெய்ன் கொண்டதாக வந்துள்ளது. இந்த என்ஜின் ஆட்டோமேட்டிக் eCVT கியர்பாக்ஸ் பெற்று மட்டுமே வருகின்றது.
0-100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 9.6 வினாடிகள் எடுத்துக் கொள்ளுகின்றது. இன்விக்டோ காரின் மைலேஜ் 23.24 Kmpl ஆகும்.
Maruti Invicto Zeta+
- அனைத்து விளக்குகளும் எல்இடி ஆக வழங்கப்பட்டுள்ளது.
- டர்ன் இன்டிகேட்டர் கொண்ட பாடி கலர் ORVM
- பாடி கலர் கைப்பிடிகள் (வெளிப்புறம்)
- அலாய் வீல்
- ரியர் வைப்பர் மற்றும் வாஷர்
- இரண்டு விதமான இருக்கை அமைப்பு
- 7 மற்றும் 8 இருக்கைகள்
- 2வது வரிசை 60:40 ஸ்பிளிட்
- 3வது வரிசை 50:50 மடித்தால்
- 8 அங்குல தொடுதிரை அமைப்பு
- 6 ஸ்பீக்கர் ஒலி அமைப்பு
- ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ
- 7-இன்ச் TFT டிஸ்ப்ளே
- ரியர் டிஃபோகர்
- முன் மற்றும் பின்புற டிஸ்க் பிரேக்
- சுசூகி கனெக்டேட் கார் தொழில்நுட்பம்
- ரியர் வியூ கேமரா
- ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக்
- EBD உடன் ஏபிஎஸ்
- மேனுவல் IRVM
Maruti Invicto Alpha+
- க்ரோம் பூச்சூ கதவு கைப்பிடிகள்
- வீல் ஆர்சு கிளாடிங்
- பனோரமிக் ஸ்லைடிங் சன்ரூஃப்
- லெதெரேட் இருக்கைகள்
- ஒன் டச் பவர் டெயில்கேட்
- 8 வழியில் இயங்கும் அட்ஜெஸ்ட் ஓட்டுநர் இருக்கை
- 2வது வரிசை தானியங்கி காலநிலை கட்டுப்பாடு
- ORVM
- 10.1 அங்குல தொடுதிரை அமைப்பு
- வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே
- டயர் அழுத்த மானிட்டர்
- பின்புற சீட்பெல்ட் நினைவூட்டல் (2வது மற்றும் 3வது வரிசை)
- நேவிகேஷனுடன் 360 டிகிரி கேமரா
- ரியர் மற்றும் முன்புற பார்க்கிங் சென்சார்
- ஆட்டோ IRVM
- ISOFIX குழந்தை இருக்கை
- ரிமோட் ஏசி மற்றும் இருக்கை காற்றோட்டம்
சுசூகி இன்விக்டோ விலை
- Invicto 7 Seater Zeta ₹ 24.79 லட்சம்
- Invicto 8 Seater Zeta+ – ₹ 24.84 லட்சம்
- Invicto 7 Seater Alpha+ – ₹ 28.42 லட்சம்