வரும் அக்டோபர் 21 ஆம் தேதி உற்பத்தி நிலை காம்பாக்ட் எஸ்யூவி நிசான் மேக்னைட் அறிமுகம் செய்யப்பட உள்ளது. கான்செப்ட மாடலின் வடிவ தாத்பரியங்களை நேரடியாக உற்பத்தி நிலைக்கு நிசான் கொண்டு வந்துள்ளது.

முன்பாக சில சோதனை ஓட்ட படங்கள் இணையத்தில் கசிந்திருந்த நிலையில், மேலும் சில படங்கள் சமீபத்தில் வெளியாகியுள்ளது. தோற்ற அமைப்பில் கான்செப்ட் நிலை காருக்கும் உற்பத்தி நிலை மாடலுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லாமல் மேக்னைட்டை நிசான் வடிவமைத்துள்ளது.

இன்டிரியரில 3 ஸ்போக்குகளை பெற்ற ஸ்டீயரிங் வீலில் ஆடியோ மவுன்டேட் கன்ட்ரோல் வழங்கப்பட்டு, டிஜிட்டல் கிளஸ்ட்டர் எவ்விதமான கோடுகளும் இல்லாமல் நீட் அன்ட் கிளீன் டிசைனாக கொடுக்கபட்டுள்ள டேஸ்போர்டில் 8 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகளும் வழங்கப்பட உள்ளது. டாப் வேரியன்ட்டை பொறுத்தவரை டூயல் டோன் நிறங்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.

மேக்னைட் எஸ்யூவி கார் மாடலில் 95 hp பவரை வழங்கும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படலாம். இதில் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் இடம்பெற வாய்ப்புள்ளது. இதுதவிர சாதாரன 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 72hp பவருடன் வரக்கூடும். இதில் 5 வேக மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் இடம்பெறக் கூடும்.

அக்டோபர் 21 ஆம் தேதி மேக்னைட் எஸ்யூவி காரின் உற்பத்தி நிலை மாடல் வருவதனை நிசான் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளதால் விற்பனைக்கு வெளியிடப்படும் தேதிபின்னர் அறிவிக்கப்படலாம்.

web title – Nissan Magnite suv to debut on October 21 – car news in Tamil