95 % உதிரிபாகங்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு தயாரிக்கப்படுகின்ற ஸ்கோடா ஆட்டோவின் குஷாக் எஸ்யூவி காரில் இரண்டு பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் இணைக்கப்பட்டுள்ளது.
ஃபோக்ஸ்வாகன் குழுமத்தின் ‘India 2.0 project’ திட்டத்தில் விஷன் இன் கான்செப்ட் என அறிமுகம் செய்யப்பட்டு முதல் மாடலாக உற்பத்திக்கு எடுத்து செல்லப்பட்டுள்ள இந்த எஸ்யூவி காரில் பிரத்தியேகமான MQB A0 IN மாடூலர் பிளாட்ஃபாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
குஷாக்கில் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் அதிகபட்சமாக 115PS பவர் 200Nm டார்க் வெளிப்படுத்தும் மாடலில் 6 வேக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. அடுத்தப்படியாக, டாப் வேரியண்டில் 1.5 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் அதிகபட்சமாக 150PS பவர் 250Nm முறுக்குவிசை வெளிப்படுத்தும் மாடலில் 6 வேக மேனுவல் மற்றும் 7 வேக டிஎஸ்ஜி ஆட்டோ கியர்பாக்ஸ் பெற உள்ளது.
இந்த காரின் உட்புறத்தில் மிக நேர்த்தியான டிசைன் அமைப்பில் கொடுக்கப்பட்டு டேஸ்போர்டில் க்ரோம் பார் இணைக்கப்பட்டு, சென்டரல் கன்சோலில் 10 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கனெக்ட்டிவ் சார்ந்த கார் மை ஸ்கோடா கனெக்ட் தொழில்நுட்பத்தையும் கொண்டதாக விளங்கும்.
டாப் வேரியண்டுகளில் சூப்பர்ப் Laurin & Klement மாடலில் உள்ளதை போன்ற இரண்டு ஸ்போக் ஸ்டீரியங் வீல் இணைக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே உட்பட 6 ஸ்பீக்கர்கள், வென்டிலேட்டேட் இருக்கை, ஆகியவற்றை பெற்றிருக்கும்.
குஷாக் எஸ்யூவி காரில் 6 ஏர்பேக்குகள், ISOFIX குழந்தைகள் இருக்கை, ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப், வைப்பர் பெற்றுள்ளது.
அடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள குஷாக் மாடலுக்கு ஹூண்டாய் கிரெட்டா, டாடா ஹாரியர், மஹிந்திரா எக்ஸ்யூவி500, கியா செல்டோஸ், நிஸான் கிக்ஸ் உட்பட வரவிருக்கும் ஃபோக்ஸ்வேகன் டைகன் ஆகியவற்றை எதிர்கொள்ள உள்ளது.