Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

உற்பத்தி நிலை மாருதி சுசூகி eVX எலக்ட்ரிக் எஸ்யூவி படங்கள் வெளியானது

by MR.Durai
15 August 2023, 6:53 am
in Car News
0
ShareTweetSend

maruti suzuki evx electric suv spied

மாருதி சுசூகி நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலாக eVX விற்பனைக்கு 2024 ஆம் ஆண்டு எதிர்பார்க்கப்படும் நிலையில் உற்பத்தி நிலை காரின் படங்கள் வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே ஐரோப்பாவில் சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடதக்கதாகும்.

ஆட்டோ எக்ஸ்போ 2023 அரங்கில் முதன்முறையாக காட்சிக்கு வந்த இவிஎக்ஸ் நடுத்தர எஸ்யூவி சந்தைக்கு ஏற்றதாக வரவுள்ளது. இந்திய சந்தையில் விற்பனைக்கு வரவிருக்கும் கிரெட்டா எலக்ட்ரிக், சி3 ஏர்கிராஸ் எலக்ட்ரிக் ஆகியவற்றை எதிர்கொள்ள உள்ளது.

Maruti Suzuki eVX

 மாருதி சுசூகி 3.0 செயல்திட்ட அறிக்கையில் குறிப்பிட்டபடி, முதல் எலக்ட்ரிக் கார் 2024 ஆம் ஆண்டு விற்பனைக்கு வெளியாக உள்ளது. இந்த காருக்கான பல்வேறு பாகங்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட உள்ளதால் பேட்டரி செல் ஆனது BYD நிறுவனத்தில் இருந்து சுசூகி பெற உள்ளது.

புதிய eVX எஸ்யூவி காரில் 60kWh பேட்டரியைப் பெற்று அதிகபட்சமாக சுமார் 550 கிமீ தொலைவு பயணிக்கும் ரேஞ்சு கொண்டிருக்கும் என்று மாருதி அறிவித்துள்ளது.  இரண்டாவதாக குறைந்த 48kWh பேட்டரி அதிகபட்சமாக 400 கிமீ வரம்பினை வழங்கலாம். eVX எஸ்யூவி பரிமாணங்கள் 4,300 மிமீ நீளம், 1,800 மிமீ அகலம் மற்றும் 1,600 மிமீ உயரம் கொண்டதாக இருக்கும் என்று மாருதி குறிப்பிட்டுள்ளது.

அதிகப்படியான கிரவுண்ட் கிளியரண்ஸ், உயரமான வீல் ஆர்சு, கூபே ரக வடிவத்திலான எஸ்யூவி மாடலாக அமைந்துள்ளது. அனைத்து விளக்குகளும் எல்இடி ஆக இணைக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வரக்கூடிய மாருதி சுசூகி eVX எலக்ட்ரிக் காரின் விலை ரூ.18 லட்சத்தில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

maruti suzuki evx electric suv spied

image source

Related Motor News

Tata Punch EV Spied – டாடா பஞ்ச் எலக்ட்ரிக் காரின் சோதனை ஓட்ட படங்கள் வெளியானது

3 ஆண்டுகளில் 50,000 விற்பனை இலக்கை கடந்த டாடா நெக்ஸான் EV

மாருதி சுசூகி eVX எலக்ட்ரிக் கார் சோதனை ஓட்ட படங்கள்

474 கிமீ ரேஞ்சு வால்வோ EX30 எலக்ட்ரிக் எஸ்யூவி கார் அறிமுகம்

டாடா நெக்ஸான் EV MAX XZ+ LUX வேரியண்டில் புதிய வசதி அறிமுகம்

4 மாதங்களில் 10,000 டாடா டியாகோ எலக்ட்ரிக் கார் விநியோகம்

Tags: Electric CarsMaruti Suzuki eVX EV
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

இந்தியா வரவுள்ள ஹூண்டாய் கிரேடெர் ஆஃப் ரோடு எஸ்யூவி டிசைன் வெளியானது

இந்தியா வரவுள்ள ஹூண்டாய் கிரேடெர் ஆஃப் ரோடு எஸ்யூவி டிசைன் வெளியானது

upcoming electric suv

அடுத்தடுத்து வரவிருக்கும் XEV 9s, eVitara, Sierra.EV என மூன்று எலக்ட்ரிக் எஸ்யூவிகள்.!

டாடா மோட்டார்சின் புதிய சியரா எஸ்யூவி அறிமுகமானது

டாடாவின் ஹாரியர், சஃபாரியில் பெட்ரோல் அறிமுகமா.!

இந்தியா வரவுள்ள 2026 கியா செல்டோஸ் டிசம்பர் 10ல் அறிமுகம்

ஓலா எலக்ட்ரிக்கின் பட்ஜெட் விலை காரின் காப்புரிமை படம் வெளியானது

டொயோட்டா ஹைலக்ஸ் பிக்கப் டிரக்கில் எலக்ட்ரிக், ஹைபிரிட், ICE மற்றும் ஹைட்ரஜன் அறிமுகம்

டிசம்பர் முதல் வாரத்தில் e Vitara எலக்ட்ரிக் எஸ்யூவியை வெளியிடும் மாருதி சுசூகி

ஹூண்டாய் வென்யூ N-line எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது

ரூ.7.90 லட்சத்தில் 2026 ஹூண்டாய் Venue இந்தியாவில் அறிமுகம்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan