நெக்ஸான் எஸ்யூவி மாடலுக்கு கீழாக நிலைநிறுத்தப்பட உள்ள டாடா H2X அல்லது ஹார்ன்பில் எஸ்யூவி காரின் உற்பத்தி நிலை மாடல் ஆட்டோ எக்ஸ்போ 2020 அரங்கில் வெளிப்படுத்தப்பட உள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், 2020 ஆட்டோ எக்ஸ்போவில் CESS என்றடாடாவின் H2X மைக்ரோ எஸ்யூவி ஜெனீவா மோட்டார் ஷோவில் அறிமுகம் நோக்கத்தில் தனது கார்களை வெளியிட உள்ளது. CESS என்றால் Connected, Electric, Shared மற்றும் Safe ஆகும். 4 சர்வதேச அறிமுகம் என 12 பயணிகள் வாகனம், 14 வர்த்தக வாகனங்கள் என மொத்தமாக 26 வாகனங்களை வெளியிட உள்ளது.

ALFA  பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டு வருகின்ற ஹார்ன்பில் எஸ்யூவி காரின் நீளம் 3840 மிமீ மட்டுமே இருக்கும் என்பதனால், இந்தியாவில் விற்பனையில் கிடைக்கின்ற எஸ் பிரெஸ்ஸா, ரெனால்ட் க்விட் போன்ற மாடல்களை எதிர்கொள்வதுடன் கேயூவி 100 காரையும் எதிர்கொள்ள உள்ளது. இந்த காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படலாம். இதில் 5 வேக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றிருக்கும். டீசல் என்ஜின் வருகை குறித்து உறுதியான தகவல் இல்லை.

டிஜிட்டல் கிளஸ்ட்டருடன் இன்டிரியர் அமைப்பில் டியாகோ காரின் அம்சங்களை பெற்றதாக வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. டாடா ஹார்ன்பில் எஸ்யூவி விலை ரூ.5 லட்சத்தில் தொடங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஆட்டோ எக்ஸ்போ அறிமுகத்தின் போது விற்பனை தேதி குறித்த தகவல் வெளியாகும்.

hornbill suv