Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

7 சீட்டர் பெற்ற ரெனோ ட்ரைபர் கார் அறிமுகம்..!

by automobiletamilan
June 19, 2019
in கார் செய்திகள்

Renault Triber

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரெனோ ட்ரைபர் மிகவும் ஸ்டைலிஷான எஸ்யூவி ரக கார்களுக்கு இணையான தோற்றத்தை வெளிப்படுத்துகின்றது.  பல்வேறு பயன்பாடுகளுக்கு ஏற்ற வகையில் 7 இருக்கை கொண்ட ட்ரைபர் காரின் நீளம் 3990 மிமீ ஆகும்.

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற எம்பவி மாடல்களில் ஸ்டைலிஷான ட்ரைபரில் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே உள்ளிட்ட வசதிகளை கொண்டுள்ளது.

ரெனோ ட்ரைபர் காரின் சிறப்புகள்

இந்தியாவில் முதன்முறையாக  4 மீட்டருக்கு குறைவான நீளம் கொண்ட இந்த மாடலில் மூன்றாவது வரிசை இருக்கை வழங்கப்பட்டுள்ளது. மூன்றாவது வரிசை இருக்கை நீக்கும் பட்சசத்தில் அதிகபட்சமாக 625 லிட்டர் பூட் ஸ்பேஸ் வழங்கப்படுகின்றது. 3990 மிமீ நீளம் கொண்ட இந்த காரின் அகலம் 1739 மிமீ , 1643 மிமீ உயரத்தை பெற்றுள்ள ட்ரைபரின் 7 இருக்கைகான வீல்பேஸ் 2636 மிமீ ஆகும்.

இந்த காரின் கிரவுண்ட் கிளியரண்ஸ் 182 மிமீ ஆகும்.  ட்ரைபர் காரின் மொத்த எடை 947 கிலோ கிராம் ஆகும். இந்த மாடலின் டாப் வேரியண்டில் 15 அங்குல அலாய் வீல் மற்றும் பேஸ் வேரியண்டுகளில் 14 அங்குல வீல் பொருத்தப்பட்டிருக்கும்.

Renault Triber MPV

இந்த ட்ரைபர் எம்பிவி மாடலில் 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். கூடுதலான எச்பி பவரை அதாவது 72 ஹெச்பி பவர் மற்றும் 96 என்எம் டார்க் வரை வெளிப்படுத்தும். இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் உட்பட 5 வேக ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் போன்றவை இடம்பெற்றிருக்கும்.

ரெனோ ட்ரைபர்

ரெனோ ட்ரைபர் காரின் இன்டிரியரில் இரு நிற கலவையுடன் 3.5 அங்குல எல்சிடி கிளஸ்ட்டர் மற்றும் 7.5 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டிருக்கும். இந்த சிஸ்டத்தில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே உள்ளிட்ட வசதிகளை பெற்றதாகவும் நேவிகேஷன், மற்றும் எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் வகையிலான அம்சமும் இணைக்கப்பட்டிருக்கும்.

இந்த காரில் அடிப்படையான பாதுகாப்பு அம்சமாக  டூயல் முன்பக்க ஏர்பேக், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உடன் இபிடி, பார்க்கிங் சென்சார், ஸ்பீடு வார்னிங் சிஸ்டம், மற்றும் உயர் ரக மாடல்களில் ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா கொண்டதாக வரக்கூடும்.

பி பிரிவு ஹேட்ச்பேக் கார்கள் உட்பட காம்பாக்ட் எஸ்யூவி மாடல்களுக்கு சவாலாக விளங்க உள்ள ரெனோ ட்ரைபர் கார் மாடலின் விலை விபரம் குறித்து ரெனால்ட் குறிப்பிடுகையில், தற்போது சந்தையில் கிடைக்கின்ற பி பிரிவு ஹேட்ச்பேக் கார்கை விட 20 சதவீதம் குறைவாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளது. எனவே, ரெனோ ட்ரைபர் விலை ரூ.5.30 லட்சத்தில் தொடங்கலாம்.

Tags: RenaultRenault Triberரெனால்ட் ட்ரைபர்ரெனோ ட்ரைபர்
Previous Post

ரூ.1.47 லட்சத்தில் கேடிஎம் RC 125 விற்பனைக்கு வெளியானது

Next Post

ரூ.36,000 விலை உயர்ந்த மஹிந்திரா எஸ்யூவிகளின் பின்னணி என்ன.?

Next Post

ரூ.36,000 விலை உயர்ந்த மஹிந்திரா எஸ்யூவிகளின் பின்னணி என்ன.?

Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version