இந்தியா உட்பட சர்வதேச அளவில் ரெனால்ட் ட்ரைபர் ( Renault Triber ) எம்பிவி காரினை ஜூன் 19 ஆம் தேதி ரெனால்ட் இந்தியா நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. 7 இருக்கை கொண்ட ட்ரைபர் காரின் விலை ரூ.5 லட்சத்தில் விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ரெனோ இந்தியா நிறுவனத்தின் பிரபலமான க்விட் காரின் CMF-A பிளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்பட்டுள்ள ட்ரைபர் காரில் பெரும்பாலான உதிரிபாகங்கள் உள்நாட்டில் தயாரிக்கப்படிருக்கும் என்பதனால் விலை மிகவும் சவாலாக அமைந்திருக்கும். க்விட் காரினை தொடர்ந்து ட்ரைபரை ரெனோ மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியிட உள்ளது.
ரெனால்ட் ட்ரைபர்
3.9 மீட்டர் நீளத்தில் 7 இருக்கை பெற்ற மாடலாக விற்பனைக்கு வெளியாக உள்ள ட்ரைபரில் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன் மட்டும் இடம்பெற்றிருக்கும். குறிப்பாக ரெனோ காரில் இடம்பெற்றிருந்த 1.0 லிட்டர் என்ஜின் கூடுதலான பவர் மற்றும் டார்க் வழங்கும் வகையில் விளங்கலாம்.
ட்ரைபர் எம்பிவி மாடலில் 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். கூடுதலான எச்பி பவரை அதாவது 75 ஹெச்பி வரை வெளிப்படுத்தும் வகையில் மேம்படுத்தப்பட்டிருக்கும் என கூறப்படுகின்றது. எனினும், இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் உட்பட 5 வேக ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் போன்றவை இடம்பெற்றிருக்கும்.
ஆப்பிள் கார் ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற அம்சங்களுடன் பல்வேறு ஸ்மார்ட் சார்ந்த வசதிகளை பெற்ற 7 அங்குல தொடுதிரை சிஸ்டத்தை கொண்டிருப்பதுடன் கூடுதலாக கனெக்கட்டிவிட்டி அம்சங்களையும் பெற்றிருக்கலாம்.
தற்போது புதிதாக வெளியிடப்பட்டுள்ள டீசரில் ட்ரைபர் காரின் முகப்பில் மிக நேர்த்தியான தோற்றத்தை வெளிப்படுத்தும் V வடிவ கிரில் அமைப்பினை பெற்று பகல் நேர எல்இடி ரன்னிங் விளக்குகளை கொண்டதாகவும் , ரூஃப் ரெயில் போன்றவற்றை பெற்று இந்நிறுவனத்தின் பிரபலமான கேப்டூர் எஸ்யூவி காரின் தோற்ற அமைப்பினை வெளிப்படுத்துகின்றது.
அக்டோபர் 1, 2019, முதல் இந்தியாவில் கிராஷ் டெஸ்ட் விதிகளுக்கு உட்பட்ட கார்கள் மட்டும் விற்பனை அனுமதி அளிக்கப்பட உள்ளது. எனவே, பாரத் கிராஷ் டெஸ்ட் விதிகளுக்கு ஏற்ப தயாரிக்கப்பட உள்ள ட்ரைபரில் டூயல் முன்பக்க ஏர்பேக், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உடன் இபிடி, பார்க்கிங் சென்சார், ஸ்பீடு வார்னிங் சிஸ்டம், மற்றும் உயர் ரக மாடல்களில் ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா கொண்டதாக வரக்கூடும்.
ரெனோ ட்ரைபர் கார் மாடல் ரூபாய் 5.50 லட்சம் முதல் ரூபாய் 8 லட்சம் விலைக்குள் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
பார்வையிடுங்க – ஆட்டோமொபைல் தமிழன் யூடியூப் சேனல்