வரும் ஜனவரி 22 ஆம் தேதி விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய அல்ட்ராஸ் ஐ டர்போ காரில் இடம்பெற உள்ள 110 ஹெச்பி பவர் இன்ஜினுடன், கூடுதலான வசதிகளை பெற்றதாக டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்துள்ளது.
முன்பாக நெக்சானில் இடம்பெற்றிருந்த டர்போ இன்ஜின் 120 ஹெச்பி பவர் குறைக்கப்பட்டு, 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 3 சிலிண்டர் அதிகபட்சமாக 5500 ஆர்.பி.எம்-மில் 110 பிஎஸ் பவர் மற்றும் 1500-5000 ஆர்.பி.எம்-மில் 140 என்எம் வெளிப்படுத்தும். இந்த டர்போ பெட்ரோல் என்ஜின் முதற்கட்டமாக 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.
0-100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு வெறும் 12 விநாடிகளில் எட்டிவிடும். ARAI சான்றிதழ் படி மைலேஜ் லிட்டருக்கு 18.13 கிமீ ஆக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல்ட்ராஸ் ஐடர்போ வேரியண்டில் சிட்டி, ஸ்போர்ட் பெற்றுள்ளது. சாதாரண வேரியண்டில் சிட்டி மற்றும் ஈக்கோ மோட் இணைக்கப்பட்டுள்ளது.
சாதாரண பெட்ரோல் மற்றும் டர்போ பெட்ரோல் மாடலுக்கும் எந்த டிசைன் மாற்றங்களும் இல்லாமல் அமைந்திருக்கின்றது. கூடுதலாக ஒரு நீல நிறம் மட்டும் இணைக்கப்பட்டுள்ளது. மற்றபடி,XT, XZ மற்றும் XZ+ என மூன்று வேரியண்டுகளில் கிடைக்க உள்ளது. புதிதாக இணைக்கப்பட்டுள்ள XZ+ வேரியண்டில் 8 ஸ்பீக்கர்களை கொண்ட ஹார்மன் சவுண்ட் சிஸ்டம், லெதெரேட் இருக்கை, எக்ஸ்பிரஸ் கூல் வசதி மற்றும் டாடாவின் IRA (Intelligent Real time Assistant) கனெக்டேட் கார் நுட்பம் இணைக்கப்பட்டுள்ளது. 7.0 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே வசதிகள் உள்ளது.
ல்ட்ராஸ் டர்போ மாடல் ரூ.7.99 லட்சத்தில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த காருக்கு நேரடியான போட்டியை ஃபோக்ஸ்வாகன் போலோ 1.0 TSI மற்றும் ஹூண்டாய் ஐ20 டர்போ மாடலை எதிர்கொள்ளும். தற்போது ரூ.11,000 கட்டணமாக செலுத்தி முன்பதிவு ஜனவரி 14 ஆம் தேதி முதல் செய்து கொள்ளலாம்.
ஜனவரி 22 ஆம் தேதி விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.