டாடா மோட்டார்ஸ் வெளியிட்டுள்ள புதிய டீசரின் மூலம் Curvv.ev எஸ்யூவி கூபே மாடலுக்கான அறிமுகத்தை உறுதி செய்துள்ளதால் விற்பனைக்கு இந்த மாத இறுதி அல்லது அடுத்த மாத துவக்க வாரங்களில் எதிர்பார்க்கப்படுகின்றது.
கர்வ் எஸ்யூவி காரில் எலக்ட்ரிக் மட்டுமல்லாமல் ICE மாடலும் விற்பனைக்கு வரும் மாதங்களில் எதிர்பார்க்கப்படுகின்றது. 2023 ஆம் ஆண்டு கான்செப்ட்மாடல் காட்சிக்கு வந்த நிலையில் தற்பொழுது முதன்முறையாக எலக்ட்ரிக் காரின் டீசர் வெளியிட்டுள்ளது.
பஞ்ச்.இவி காரினை தொடர்ந்து புதிதாக டாடா மோட்டார்சின் Acti-EV பிளாட்ஃபாரத்தின் அடிப்பபடையில் தயாரிக்கப்படுகின்றதால் 40 முதல் 60 kWh வரையிலான பிரிவில் இரண்டு மாறுபட்ட பேட்டரி ஆப்ஷனை கொண்டிருக்க உள்ள இந்த மாடலின் ரேஞ்ச் 450 கிமீ முதல் 600 கிமீ வரையிலான ரேஞ்ச் பெற்று 2WD & 4WD என இரு ஆப்ஷனும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்திய சந்தையில் கிடைக்கின்ற எம்ஜி ZS EV, உட்பட வரவிருக்கின்ற ஹூண்டாய் கிரெட்டா.இவி, மாருதி eVX மற்றும் மஹிந்திரா XUV e.8 ஆகியவற்றை எதிர்கொள்ள உள்ள டாடா கர்வ்.ev விலை ரூ.18 முதல் ரூ.19 லட்சத்தில் துவங்கலாம்.
முதற்கட்டமாக எலக்ட்ரிக் மாடலும் அடுத்த மூன்று முதல் ஆறு மாதங்களுக்குள் ICE கர்வ் மாடலும் சந்தைக்கு வரவுள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிதாக மேம்படுத்தப்பட்டு முற்றிலும் நவீனத்துவமான ரெட்ரோ டிசைன் அமைப்பினை கொண்ட 2024 டெஸ்டினி 125 மாடலை…
ஜாவா யெஸ்டி மோட்டார் சைக்கிள் நிறுவனம் இந்திய சந்தையில் ஜாவா 350, 42 FJ, 42, பெராக் மற்றும் 42…
கியா நிறுவனம் கார்னிவல் 2024 ஆம் ஆண்டிற்கான புதிய மாடல் விற்பனைக்கு அக்டோபர் 3 ஆம் தேதி இந்திய சந்தையில்…
ஹூண்டாய் மோட்டார் இந்திய நிறுவனத்தின் ஆரா செடான் காரின் ஆரம்ப நிலை E வேரியன்டிலும் தற்பொழுது சிஎன்ஜி அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.…
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது காம்பேக்ட் வெனியூ எஸ்யூவி மாடலில் E+ என்ற வேரியண்டில் சன்ரூஃப் வசதியை கொண்டு வந்துள்ளது.…
துவக்கநிலை சந்தைக்கான எஸ்யூவி மாடல்களில் ஒன்றான ஹூண்டாய் நிறுவனத்தின் எக்ஸ்ட்ர் காரில் இரண்டு சன்ரூஃப் பெற்ற வேரியண்டுகள் குறைவான விலையில்…