டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்ஸான் EV எஸ்யூவி கார் புதிய ஜிப்ட்ரான் நுட்பத்தை பெற்றதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் விலை ஜனவரி மாதம் இறுதியில் அறிவிக்கப்படலாம். இந்த காருக்கான முன்பதிவு டிசம்பர் 20 முதல் துவங்குகின்றது.
ஜிப்ட்ரானின் நுட்பத்தை பெற்று வந்துள்ள முதல் காரான நெக்ஸானில் மிக வேகமாக சார்ஜிங் செய்வதற்கான விரைவு சார்ஜிங் வசதி ஆப்ஷன் உட்பட லித்தியம் ஐயன் செல் கொண்ட பேட்டரியை பாதுகாக்க லிக்யூடு கூல்டு வசதியுடன், ஐடியல் வெப்பத்தை பராமரிக்கும் நோக்கில் வழங்கப்படும். உயர் ரக ஸ்டீல் பேக்கில் பொருத்தப்பட்டிருக்கும் இந்த பேட்டரிக்கு IP67 சான்றிதழ் பெற்றிருக்கும். எனவே, தூசு மற்றும் நீரினால் எந்த பாதிப்பும் ஏற்படாது. டாடாவின் நெக்ஸான் எலக்ட்ரிக் வாகனங்களின் பேட்டரி மற்றும் மோட்டாருக்கு 8 ஆண்டு வாரண்டி அல்லது 1,60,000 கிமீ வழங்கப்பட உள்ளது.
நெக்ஸான் இ.வி காரில் நெக்ஸான் EV XM, நெக்ஸான் EV XZ மற்றும் நெக்ஸான் EV XZ+ LUX என மூன்று விதமான வேரியண்டுகள் இடம் பெற்றிருக்கின்றது. இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள 30.2 kwh பேட்டரி பேக் பொருத்தப்பட்டு 128 ஹெச்பி பவர் மற்றும் 254 Nm டார்க் வெளிப்படுத்தும். 0-60 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 4.5 விநாடிகளும், 0-100 கிமீ வேகத்தை வெறும் 9.9 விநாடிகளில் எட்டிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியன் டிரைவிங் சைக்கிள் படி 300 கிமீ வரம்பை ஒற்றை முறை சார்ஜிங்கில் வழங்குவதுடன், அதிகபட்சமாக 80 சதவீத சார்ஜிங் பெற டிசி ஃபாஸ்ட் சார்ஜர் வாயிலாக ஒரு மணி நேரத்திலும், சாதாரன ஏசி சார்ஜரில் 7-8 மணி நேரம் 80 சதவீத சார்ஜ் செய்ய இயலும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அனைத்து வேரியண்டிலும் டூயல் ஏர்பேக், ஏபிஎஸ் இபிடி, ஐஎஸ்ஓ சைல்டு ஃபிக்ஸ் இருக்கைகள் இடம்பெற்றிருப்பதுடன், கூடுதலாக டாப் வேரியண்டில் 7.0 இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உட்பட 30க்கு மேற்பட்ட கனெக்ட்டிவிட்டி வசதிகளை பெற்றதாக வந்துள்ளது.
டாடா நெக்ஸான் EV காரின் விலை ரூ.15 லட்சம் முதல் ரூ.17 லட்சத்தில் அமையலாம்.