Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

2023 செப்டம்பரில் வரவிருக்கும் கார் மற்றும் எஸ்யூவிகள்

by automobiletamilan
August 31, 2023
in கார் செய்திகள்
1
SHARES
0
VIEWS
ShareRetweet

 

இந்திய சந்தையில் வரும் செப்டம்பர் 2023 மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ள கார்களில் ஹோண்டா எலிவேட், சிட்ரோன் சி3 ஏர்கிராஸ், டாடா நெக்ஸான், டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர், உள்ளிட்ட மாடல்களுடன் ஆடம்பர கார்களான மெர்சிடிஸ் EQE எலக்ட்ரிக் எஸ்யூவி, ஆஸ்டன் மார்ட்டின் DB12 போன்றவையும் உள்ளது.

இந்த கார்கள் தவிர ஒரு சில ஃபேஸ்லிஃபட் மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு எடிசன்களும் வரக்கூடும்.

Table of Contents

  • Honda Elevate
  • Citroen C3 Aircross
  • 2023 Tata Nexon facelift
  • Toyota urban Cruiser Taisor
  • Mercedes-Benz EQE
  • BMW 2 Series M performance
  • Aston Martin DB12
  • Lexus LM

Honda Elevate

வரும் செப்டம்பர் 4 ஆம் தேதி ஹோண்டா நிறுவனத்தின் புதிய எலிவேட் எஸ்யூவி C- பிரிவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. 1.5-லிட்டர், நான்கு சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 4300rpm-ல் 121hp பவர், மற்றும் 145Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது CVT கியர்பாக்ஸ் என இரண்டு விதமான ஆப்ஷனை கிடைக்கின்றது.

honda elevate ev price

Citroen C3 Aircross

மிக குறைந்த விலையில் C- பிரிவில் எதிர்பார்க்கப்படுகின்ற சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் காரில் 108 hp பவரை வெளிப்படுத்துகின்ற 1.2 லிட்டர் ட்ர்போ என்ஜினை பெற உள்ள சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் எஸ்யூவி காரின் முன்பதிவு செப்டம்பர் மாதம் துவங்கப்பட உள்ளதால் விலை மாத இறுதியில் அறிவிக்கப்படலாம்.

citroen c3 aircross suv

2023 Tata Nexon facelift

வரும் செப்டம்பர் 14 ஆம் தேதி டாடா நெக்ஸான் 2023 ஆம் ஆண்டிற்கான மாடல் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. முந்தைய மாடலை விட முற்றிலும் மாற்றியமைக்கப்பட்ட டிசைனை பெற்றுள்ள நெக்ஸானில் தொடர்ந்து இரண்டு பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் இடம்பெற உள்ளது. இதுதவிர, நெக்ஸான் எலக்ட்ரிக் காரும் மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் வரக்கூடும்.

2023 tata nexon facelift rear

Toyota urban Cruiser Taisor

சமீபத்தில் மாருதி அறிமுகம் செய்த ஃபிரான்க்ஸ் காரின் அடிப்படையில் ரீபேட்ஜ் செய்யப்பட்ட அர்பன் க்ரூஸர் டைசர் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. ஏற்கனவே பலேனோ அடிப்படையில் கிளான்ஸா மற்றும் சமீபத்தில் எர்டிகா அடிப்படையில் ருமியன் காரை வெளியிட்டுள்ளது.

maruti fronx rear

Mercedes-Benz EQE

590 கிமீ ரேஞ்சு கிடைக்கின்ற மெர்சிடிஸ்-பென்ஸ் EQE காரில் 90.6kWh பேட்டரி பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 292hp மற்றும் 565Nm டார்க் வெளிப்படுத்தும். சர்வதேச அளவில் பல்வேறு வேரியண்டுகள் கிடைக்கும் நிலையில் இந்தியாவில் செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.

Mercedes EQE SUV

BMW 2 Series M performance

பெர்ஃபாமென்ஸ் ரக எம் வரிசையில் வரவுள்ள பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் எம் மாடலில் 2.0 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு 179hp மற்றும் 280Nm டார்க் வெளிப்படுத்தி 7 வேக டூயல் கிளட்ச் ஆட்டோ கியர்பாக்ஸ் பெறும் மாடல் செப்டம்பர் 7 விலை அறிவிக்கப்பட உள்ளது.

bmw 2 series m

Aston Martin DB12

டாப் ஸ்பீடு 325kph வேகத்தை பெற்ற ஆஸ்டன் மார்ட்டின் DB12 காரில் சக்திவாய்ந்த 4.0 லிட்டர் வி8 என்ஜின் அதிகபட்சமாக பவர் 680hp மற்றும் 800Nm டார்க் வழங்குகின்ற மாடல் செப்டம்பர் 29 ஆம் தேதி வெளியாகும்.

Aston Martin DB12 price

Lexus LM

டொயோட்டா வெல்ஃபயர் அறிமுகம் செய்யப்பட்ட மாடலின் அடிப்படையில் லெக்சஸ் எல்எம் 2.5 லிட்டர் பவர்டிரெய்ன் 193 hp மற்றும் 240 Nm டார்க் வழங்குகின்றது. இந்த மாடலில் இ-சிவிடியுடன் இணைக்கப்பட்டுள்ளது. விற்பனைக்கு விரைவில் வரவுள்ளது.

Lexus LM

Tags: Citroen C3 AircrossHonda ElevateTata Nexon
Automobile news in Tamil
  • auto
  • contact us
  • Privacy Policy
  • SiteMap

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus

© 2023 Automobile Tamilan