வோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம், போலோ, வென்டோ, மற்றும் ஏமியோ கார்களில் சிறப்பு பிளாக் & ஒயிட் எடிசன் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதுதவிர போலோ மற்றும் வென்ட்டோ கார்களில் டிப் பிளாக் நிறம் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.

டீலர்களிடம் கிடைக்க தொடங்கியுள்ள இந்த சிறப்பு எடிசன் மாடல்களின் விலை உயர்த்தப்படவில்லை. நிறங்களை தவிர சிறிய அளவிலான இன்டிரியர் நிறங்கள் மட்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

வோக்ஸ்வேகன் பிளாக் & ஒயிட் எடிசன்

மூன்று மாடல்களிலும் 1.5 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஏமியோ மற்றும் வென்ட்டோ காரில் 110 ஹெச்பி பவரை வழங்கும் என்ஜின் 7 வேக டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை பெற்றுள்ளது. போலோ காரில் 5 வேக கியர்பாக்ஸ் பெற்று 90 ஹெச்பி ஆற்றல் வழங்கப்படுகின்றது.

ஏமியோ மற்றும் போலோ காரில் 75 ஹெச்பி ஆற்றல் வழங்கும் 1.0 லிட்டர் என்ஜின் கொண்டுள்ளது. மேலும் போலோ மற்றும் வென்ட்டோ காரில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் வென்டோ காரில் 1.6 லிட்டர் பெட்ரோல் பெற்றுள்ளது.

பிளாக் மற்றும் ஒயிட் எடிசனில் கருப்பு மற்றும் வெள்ளை நிற லெதர் இருக்கைகள், 16 அங்குல அலாய் வீல், கருப்பு  நிறத்திலான மேற்கூறை , ORVMs உள்ளிட்ட அம்சங்களை பெற்றதாக கிடைக்கின்றது.