Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவி உற்பத்தி ஆரம்பம்

by automobiletamilan
March 22, 2017
in கார் செய்திகள்

கடந்த 2016-ம் ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் முதன்முறையாக இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவி காரின் உற்பத்தி இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது.

டிகுவான் எஸ்யூவி

  • மஹாராஷ்ட்டிரா மாநிலத்தில் அமைந்துள்ள அவுரங்காபாத் ஃபோக்ஸ்வேகன் இந்தியா ஆலையில் டிகுவான் எஸ்யூவி உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.
  • 147 பிஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் TDI டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.
  • மே மாதம் டீகுவான் கார் விற்பனைக்கு ரூ. 29 லட்சத்தில் அறிமுகம் செய்யப்படலாம்.

சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்ற ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவி மாடல் ஐரோப்பா என்சிஏபி கிராஸ் டெஸ்ட் சோதனையில் 5 நட்சத்திர தர மதிப்பீட்டை பெற்றுள்ளது.

2.0 லிட்டர் TDI டீசல் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 147 பிஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்துவதுடன் 340 என்எம் டார்க்கினை வழங்குகின்றது. ஆற்றலை சக்கரங்களுக்கு எடுத்துச் செல்ல 7 வேக டிஎஸ்ஜி ஆட்டோ கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் MQB பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்ட முதல் எஸ்யூவி மாடலான டிகுவான் காரில் பல்வேறு சிறப்பு வசதிகளை பெற்றிருப்பதுடன் இன்டிரியரில் 8 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் நேவிகேஷன், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே வசதிகளுடன் வரவுள்ளது. தோற்ற அமைப்பில் 17 அங்குல அலாய் வீல், பகல் நேரத்தில் ஒளிரும் எல்இடி விளக்குகளுடன் வரவுள்ளது.

அடிப்படையான பாதுகாப்பு அம்சங்களாக ஏபிஎஸ், 2 காற்றுப்பை மற்றும் டாப் வேரியன்டில் அதிகபட்சமாக 6 காற்றுப்பைகள் போன்றவை அடிப்படையான வசதிகளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டீகுவான் எஸ்யூவி காரின் போட்டியாளர்களாக ஃபார்ச்சூனர் , எண்டேவர் , ட்ரெயில்பிளேசர் , பஜெரோ ஸ்போர்ட் போன்ற மாடல்களுக்கு எதிராக நிலைநிறுத்தப்பட உள்ளது.

இந்திய சந்தையில் விற்பனைக்கு வரவுள்ள புதிய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவி மாடலின் முன்பதிவு ஏப்ரல் மாத மத்தியில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் விற்பனைக்கு மே மாத தொடக்கத்தில் ரூ. 29 லட்சத்தில் ஆரம்ப விலை அமையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Volkswagen Tiguan production commence in India details in tamil

Tags: VolksWagenடிகுவான்
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version