Automobile Tamilan

செவர்லே 10 கார்களை அறிமுகம் செய்ய திட்டம் – 2020

செவர்லே இந்திய பிரிவு நிறுவனம் சரிந்து வரும் சந்தையை ஈடுகட்டவும் மேலும் 10க்கு மேற்பட்ட கார்களையும் வரும் 2020ம் ஆண்டிற்க்குள் அறிமுகம் செய்ய உள்ளது. செவர்லே ட்ரெயில்பிளேசர் வரும் அக்டோபரில் விற்பனைக்கு வரவுள்ளது.
செவர்லே ட்ரெயில்பிளேசர்
செவர்லே ட்ரெயில்பிளேசர்

வரும் ஆண்டுகளில் சுமார் ரூ.6400 கோடி ரூபாயை இந்தியாவில் முதலீடு செய்ய உள்ளது. இதன் மூலம் 12,000 வேலை வாய்ப்புகள் உருவாகும். மேலும் வரவிருக்கும் மாடல்கள் அனைத்தும் உள்நாட்டிலே உற்பத்தி செய்யப்பட உள்ளது.

2020ம் ஆண்டிற்க்குள் விற்பனைக்கு வரவுள்ள 10 கார்களில் முதல் தொடக்கமாக செவர்லே ட்ரெயில்பிளேசர் எஸ்யுவி விளங்கும். அதனை தொடர்ந்து ஸ்பின் எம்பிவி கார் 2017ம் ஆண்டின் தொடக்கத்தில் சந்தைக்கு வரலாம்.

மேலும் வாசிக்க ; செவர்லே ட்ரெயில் பிளேசர் விவரம்

அடுத்த தலைமுறை பீட் மற்றும் க்ரூஸ் கார்களும் 2017ம் ஆண்டில் சந்தைக்கு வரவுள்ளது. புனே அருகில் உள்ள தாலேகான் தொழிற்சாலையின் உற்பத்தி திறன் ஆண்டிற்க்கு 1,30,000 ஆக உள்ளது இதனை 2025ம் ஆண்டிற்க்குள் 2,20,000 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜிஎம் நிறுவனத்தின் தலைமை செயல்அதிகாரி மேரி பார்ரா கூறுகையில் இந்திய வாடிக்கையாளர்களுக்கு உலக தரமிக்க சிறப்பான வாகனங்களை வழங்குவதற்க்கும் வாடிக்கையாளரின் சேவையை மேம்படுத்துவதற்க்கும் இந்த முதலீட்டினை செய்துள்ளோம். இதன் மூலம் மேக் இன் இந்தியா திட்டத்தில் பங்கேற்க்கின்றோம்.

மேலும் வாசிக்க ; சக்திவாய்ந்த பெண்மனி மேரி பார்ரா

Chevrolet to launch 10 new models in India 2020

Exit mobile version