பெனெல்லி சூப்பர்பைக் விற்பனை அமோகம்

டிஎஸ்கே பெனெல்லி பைக்குகள் தொடர்ந்து புதிய விற்பனை இலக்கை நோக்கி பயணிக்கின்றது. பெங்களூருயை தொடர்ந்து புனேவில் பெனெல்லி 100 பைக்குகளை விற்பனை செய்துள்ளது.
பெனெல்லி TNT600i பைக்
பெனெல்லி TNT600i பைக்

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் விற்பனைக்கு வந்த பெனெல்லி பைக்குகள் ரூ. 2.83 லட்சத்தில் தொடங்கி 11.81 லட்சம் வரையிலான மொத்தம் 5 மாடல்களை விற்பனை செய்து வருகின்றது.

டிஎஸ்கே மோட்டோவீல்ஸ் தொழிற்சாலையில் உள்நாட்டிலே அசெம்பிளிங் செய்யப்படுவதனால் மிக சவலான விலையில் பெனெல்லி ஸ்போர்ட்டிவ் பைக்குகள் கிடைக்கின்றன.

மேலும் வாசிக்க: பெனெல்லி சூப்பர் பைக் முழுவிபரம்

விற்பனையில் உள்ள டிஎஸ்கே பெனெல்லி மாடல்கள்  TNT 300  TNT 600 , TNT 600i , TNT 600GT ,TNT 899 மற்றும் TNT R ஆகும்.

கடந்த ஜூலை மாதம் பெங்களூரு டீலர் வழியாக 100 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டன. அதனை தொடர்ந்து புனேவில் இந்த விற்பனை இலக்கினை கடந்துள்ளது.

DSK Benelli records the 2nd Fastest sale at Pune after Bengaluru

Exit mobile version