இந்தியாவின் இரு சக்கர வாகன சந்தை மிக கடுமையான சவாலினை எதிர்கொண்டு வரும் நிலையில் கடந்த மார்ச் 2019 மாதந்திர விற்பனையில் டாப் 10 பைக் பட்டியிலில் இடம் பிடித்துள்ள பைக்குகளில் தொடர்ந்து ஹீரோ ஸ்பிளென்டர் முதலிடத்தில் உள்ளது.
கடந்த 7 மாதங்களுக்கு மேலாக முதலிடத்தை இழந்த ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் விற்பனை முந்தைய ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பீடுகையில் 27.72 சதவீத வீழ்ச்சி அடைந்த மார்ச் 2019-ல் 1,48,241 யூனிட்டுகளை மட்டும் விற்பனை செய்துள்ளது. முந்தைய ஆண்டின் மார்ச் 2018-ல் 2,05,239 ஆக இருந்தது.
கடந்த நிதியாண்டின் இறுதி மாதமாக மார்ச் விளங்கினாலும், இந்தியாவில் இரு சக்கர வாகனங்களின் காப்பீடு கட்டண உயர்வு, பல்வேறு மாடல்களில் அடிப்படை பாதுகாப்பு வசதிகளாக சிபிஎஸ் அல்லது ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் இணைக்கப்பட்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் விலை அதிகரித்துள்ளது.
ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் மட்டுல்லாமல் இந்நிறுவனத்தின் பிரபலமான 125சிசி ரக சிபி ஷைன் பைக்கின் விற்பனை 65 சதவீதம் வீழ்ச்சி அடைந்து வெறும் மார்ச் 2019-ல் 29,827 விற்பனை எண்ணிக்கை பதிவு செய்துள்ளது. முந்தைய ஆண்டின் மார்ச் 2018-ல் 86,355 ஆக இருந்தது.
ஹீரோ ஸ்பிளென்டர் பைக் தொடர்ந்து முதலிடத்திலும் பல்சர் 150 பைக் விற்பனை எண்ணிக்கை 83,228 ஆக உள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பீடுகையில் 30.70 சதவீத வளர்ச்சியாகும். ஹீரோ பேஸன் மற்றும் ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் விற்பனை சரிவைக் கண்டுள்ளது.
வ.எண் | தயாரிப்பாளர்/மாடல் | மார்ச் 2019 | மார்ச் 2018 | % வளர்ச்சி |
1. | ஹீரோ ஸ்பிளென்டர் | 2,46,656 | 2,44,241 | 0.98% |
2. | ஹோண்டா ஆக்டிவா | 1,48,241 | 2,05,239 | -27.77 % |
3. | ஹீரோ HF டீலக்ஸ் | 1,46,162 | 1,84,396 | -20.73 % |
4. | பஜாஜ் பல்சர் 150 | 83,228 | 63,673 | 30.70 % |
5. | டிவிஎஸ் XL சூப்பர் | 70,726 | 75,001 | -5.60 % |
6. | பஜாஜ் பிளாட்டினா | 62,519 | 53,044 | 17.86 % |
7. | ஹீரோ பேஸன் | 58,544 | 67,374 | -13 % |
8. | ஹீரோ கிளாமர் | 56,658 | 46,083 | 22.94 % |
9. | டிவிஎஸ் ஜூபிடர் | 53,424 | 48,688 | 9.72 % |
10. | சுசூகி ஆக்செஸ் | 49,875 | 48,265 | 3 % |
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிதாக மேம்படுத்தப்பட்டு முற்றிலும் நவீனத்துவமான ரெட்ரோ டிசைன் அமைப்பினை கொண்ட 2024 டெஸ்டினி 125 மாடலை…
ஜாவா யெஸ்டி மோட்டார் சைக்கிள் நிறுவனம் இந்திய சந்தையில் ஜாவா 350, 42 FJ, 42, பெராக் மற்றும் 42…
கியா நிறுவனம் கார்னிவல் 2024 ஆம் ஆண்டிற்கான புதிய மாடல் விற்பனைக்கு அக்டோபர் 3 ஆம் தேதி இந்திய சந்தையில்…
ஹூண்டாய் மோட்டார் இந்திய நிறுவனத்தின் ஆரா செடான் காரின் ஆரம்ப நிலை E வேரியன்டிலும் தற்பொழுது சிஎன்ஜி அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.…
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது காம்பேக்ட் வெனியூ எஸ்யூவி மாடலில் E+ என்ற வேரியண்டில் சன்ரூஃப் வசதியை கொண்டு வந்துள்ளது.…
துவக்கநிலை சந்தைக்கான எஸ்யூவி மாடல்களில் ஒன்றான ஹூண்டாய் நிறுவனத்தின் எக்ஸ்ட்ர் காரில் இரண்டு சன்ரூஃப் பெற்ற வேரியண்டுகள் குறைவான விலையில்…