சரியும் ஹோண்டா விற்பனை, ஹீரோ தொடர்ந்து முன்னிலை – டாப் 10 பைக்குகள்

8e2df 2018 honda cb hornet 160r side

இந்தியாவின் இரு சக்கர வாகன சந்தை மிக கடுமையான சவாலினை எதிர்கொண்டு வரும் நிலையில் கடந்த மார்ச் 2019 மாதந்திர விற்பனையில் டாப் 10 பைக் பட்டியிலில் இடம் பிடித்துள்ள பைக்குகளில் தொடர்ந்து ஹீரோ ஸ்பிளென்டர் முதலிடத்தில் உள்ளது.

கடந்த 7 மாதங்களுக்கு மேலாக முதலிடத்தை இழந்த ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் விற்பனை முந்தைய ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பீடுகையில் 27.72 சதவீத வீழ்ச்சி அடைந்த மார்ச் 2019-ல் 1,48,241 யூனிட்டுகளை மட்டும் விற்பனை செய்துள்ளது. முந்தைய ஆண்டின் மார்ச் 2018-ல் 2,05,239 ஆக இருந்தது.

டாப் 10 பைக்குகள் – மார்ச் 2019

கடந்த நிதியாண்டின் இறுதி மாதமாக மார்ச் விளங்கினாலும், இந்தியாவில் இரு சக்கர வாகனங்களின் காப்பீடு கட்டண உயர்வு, பல்வேறு மாடல்களில் அடிப்படை பாதுகாப்பு வசதிகளாக சிபிஎஸ் அல்லது ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் இணைக்கப்பட்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் விலை அதிகரித்துள்ளது.

ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் மட்டுல்லாமல் இந்நிறுவனத்தின் பிரபலமான 125சிசி ரக சிபி ஷைன் பைக்கின் விற்பனை 65 சதவீதம் வீழ்ச்சி அடைந்து வெறும் மார்ச் 2019-ல் 29,827 விற்பனை எண்ணிக்கை பதிவு செய்துள்ளது. முந்தைய ஆண்டின் மார்ச் 2018-ல் 86,355 ஆக இருந்தது.

ஹீரோ ஸ்பிளென்டர் பைக் தொடர்ந்து முதலிடத்திலும் பல்சர் 150 பைக் விற்பனை எண்ணிக்கை 83,228 ஆக உள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பீடுகையில் 30.70 சதவீத வளர்ச்சியாகும். ஹீரோ பேஸன் மற்றும் ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் விற்பனை சரிவைக் கண்டுள்ளது.

விற்பனையில் டாப் 10 பைக்குகள் – மார்ச் 2019

வ.எண் தயாரிப்பாளர்/மாடல் மார்ச் 2019 மார்ச் 2018 % வளர்ச்சி
1. ஹீரோ ஸ்பிளென்டர் 2,46,656 2,44,241 0.98%
2. ஹோண்டா ஆக்டிவா 1,48,241 2,05,239 -27.77 %
3. ஹீரோ HF டீலக்ஸ் 1,46,162 1,84,396 -20.73 %
4. பஜாஜ் பல்சர் 150 83,228 63,673 30.70 %
5. டிவிஎஸ் XL சூப்பர் 70,726 75,001 -5.60 %
6. பஜாஜ் பிளாட்டினா 62,519 53,044 17.86 %
7. ஹீரோ பேஸன் 58,544 67,374 -13 %
8. ஹீரோ கிளாமர் 56,658 46,083 22.94 %
9. டிவிஎஸ் ஜூபிடர் 53,424 48,688 9.72 %
10. சுசூகி ஆக்செஸ் 49,875 48,265 3 %

Exit mobile version