விற்பனையில் டாப் 10 இரு சக்கர வாகனங்கள் – ஜூன் 2023

hero motocorp passion plus

இந்தியாவில் தொடர்ந்து முதன்மையான தயாரிப்பாளராக விளங்கும் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் ஸ்பிளெண்டர் பிளஸ் பைக் டாப் 10 இடங்களில் ஜூன் 2023 மாதத்தில் முதலிடத்தை பெற்றுள்ளது. அடுத்தப்படியாக, ஹோண்டா ஷைன் விற்பனை எண்ணிக்கை 1,31,920 ஆக பதிவு செய்துள்ளது.

கடந்த ஜூன் 2023, இருசக்கர வாகன விற்பனை முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் விற்பனையும் சரிவினை கண்டுள்ளது.

Top 10 Selling Two Wheeler–June 2023

ஹோண்டா ஷைன் 100 பைக்கின் அறிமுகத்திற்கு பின்னர் ஷைன் வரிசை விற்பனை சற்று உயர்ந்து காணப்படுகின்றது. அடுத்தப்படியாக ஹீரோ பேஷன் பிளஸ் வெளியான பிறகு முதன்முறையாக டாப் 10 பட்டியலில் இணைந்துள்ளது. குறிப்பாக ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் விற்பனை முந்தைய ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பீடுகையில் 21.10 சரிவடைந்துள்ளது.

டாப் 10 இருசக்கர வாகனம்ஜூன்  2023ஜூன் 2022
1. ஹீரோ ஸ்ப்ளெண்டர்2,38,3402,70,923
2. ஹோண்டா ஷைன்1,31,9201,25,943
3. ஹோண்டா ஆக்டிவா1,30,8301,84,305
4. பஜாஜ் பல்சர்1,07,20882,723
5. ஹீரோ HF டீலக்ஸ்89,7251,13,155
6. டிவிஎஸ் ஜூபிடர்64,25262,851
7. ஹீரோ பேஷன்47,55418,560
8. சுசூகி ஆக்செஸ்39,50334,131
9. பஜாஜ் பிளாட்டினா36,55027,732
10. டிவிஎஸ் XL10034,49937,434

டாப் 10 பைக் மற்றும் ஸ்கூட்டர்களில் ஹீரோ நிறுவனத்தின் மூன்று மாடல்களும், ஹோண்டா, பஜாஜ், டிவிஎஸ் நிறுவனங்கள் தலா இரண்டு மாடல்கள் மற்றும் சுசூகி நிறுவனமும் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *