அசோக் லைலேன்ட் லக்சுரா மேஜிக்கல் தற்பொழுது தனியான பயன்பாடாக மட்டும் உள்ளது. அதாவது மேன்ன் டிராவல்ஸ்க்கு(Mann Travels) மட்டும் உரியதாக உள்ளது.
இந்த பேருந்து புதுதில்லியினை சுற்றியுள்ள ஆக்ரா,ஜெய்ப்பூர் இன்னும் சில பகுதிகளுக்கு மட்டும் இயக்கப்படுகிறது. இந்த பேருந்தின் வருமானத்தில் 50 சதவீதத்தை கூங்(goong) மற்றும் சென்னை புற்றுநோய் மருத்தவமனை போன்ற தொன்டு அமைப்புகளுக்கு நன்கொடையாக தர உள்ளது.
லக்சுரா மேஜிக்கல் பேருந்தில் பயணிக்க 8 மணிநேரத்திற்க்கு ரூ 30,000 ஆகும். ஒரு மனிநேரத்தில் 80 கீமி தூரம் பயணிக்கலாம்.. 1 கீமி தூரத்திற்க்கு ரூ 150 ஆகும். 8 மணி நேரத்திற்க்கு அதிகமான நேரம் எடுக்கும்பொழுது 1 மணி நேரத்திற்க்கு 3000 ஆகும்.தினமும் ஆக்ரா இயக்க திட்டமிட்டுள்ளனர்.இதற்க்கு ரூ 65,000 ஆகும்.
228PS சக்தியை வெளிபடுத்தும் டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேருந்துகள் மிக சிறப்பான சொகுசு வசதிகள் கொண்டதாக இருக்கும். உட்புற வடிவமைப்பில் டிசி முக்கிய பங்கு வகித்துள்ளது.
சில சொகுசு வசதிகள் 9 இருக்கைகள் மட்டுமே கொண்ட பேருந்து,2 எல்சிடி தொலைக்காட்சி,ரீடிங் விளக்குகள், சமையலறை, மைக்குரோவேவ்ன், காபி மெஷின், பாத்ரூம் போன்ற வசதிகள் உள்ளன.
தற்பொழுது மேன் டிராவல்ஸ்க்கு மட்டும் தனியுரிமையாக உள்ளதால் விலைகள் அறிவிக்கப்படவில்லை. விரைவில முழு அளவான உற்பத்தி தொடங்கும் பொழுது இந்தியா முழுமைக்கு விற்பனைக்கு வரும்.