Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ஃபியட் டிப்போ செடான் காரின் விபரங்கள் ; Fiat Tipo sedan details

by MR.Durai
14 October 2015, 5:29 am
in Auto News
0
ShareTweetSend
ஃபியட் எகயா செடான் கான்செப்ட்க்கு டிப்போ என்ற பெயரினை சூட்டியுள்ளது. ஃபியட் டிப்போ கார் வரும் நவம்பர் முதல் துருக்கியில் விற்பனைக்கு செல்ல உள்ளது. டிப்போ குளோபல் செடான் காராக விளங்கும்.

ஃபியட் டிப்போ

லீனியா மாடலுக்கு மாற்றக வரவுள்ள டிப்போ கார் இரண்டு விதமான பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் உள்ளது. 40க்கு மேற்பட்ட நாடுகளில் விற்பனைக்கு வரவுள்ள ஃபியட் டிப்போ இந்தியாவிற்க்கு வருமா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

தோற்றத்தில் மிக நேர்த்தியாக அமைந்துள்ள ஃபியட் டிப்போ சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ளது. 4.5 மீட்டர் நீளமும் , 1.78 மீட்டர் அகலமும் மற்றும் 1.48மீட்டர் உயரமும் கொண்டுள்ள டிப்போ காரில் 2.64மீட்டர் வீல் பேஸ் உள்ளதால் சிறப்பான இடவசதியை பெற்றிருக்கும். இதன பூட்ஸ்பேஸ் 510 லிட்டர் கொள்ளளவு இருக்கும்.

உட்புறத்தில் 5 ” வண்ண தொடுதிரை டிஸ்பிளே , யூகனெக்ட் இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் நேவிகேஷன் அமைப்பு, தானியங்கி முகப்பு விளக்கு, மழைய உணர்ந்து செயல்படும் வைப்பர் , தானியங்கி கிளைமேட் கட்டுப்பாடு ,  ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு பொத்தான்கள் , பின்புற பார்க்கிங் சென்சார் , பின்புற பார்க்கும் கேமரா போன்ற வசதிகளை பெற்றுள்ளது.

ஃபியட் டிப்போ காரில் 94 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் FIRE பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் உள்ளது.

 118 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.6 லிட்டர் Etroq பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 6 வேக தானியங்கி கியர்பாக்ஸ் உள்ளது.

ஃபியட் டீசல் மாடலில் 95 ஹெச்பி ஆற்றலை தரவல்ல 1.3 லிட்டர் மல்டிஜெட் என்ஜினில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 120 ஹெச்பி ஆற்றலை தரவல்ல 1.6 லிட்டர் மல்டிஜெட் என்ஜினில் 6 வேக மெனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என இரண்டு என்ஜின்கள் உள்ளது.

ஹோண்டா சிட்டி , ஹூண்டாய் வெர்னா , ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ மற்றும் ஸ்கோடா ரேபிட் போன்ற மாடல்களுக்கு போட்டியாக டிப்போ விளங்கும். டிப்போ என்ற பெயரினை ஃபியட் முன்பே வெளிநாடுகளில் விற்பனை செய்த மாடலாகும்

துருக்கியில் விற்பனைக்கு செல்ல உள்ள மாடல் எகயா என்ற பெயரிலும்  ஐரோப்பியா மற்றும் ஆப்பரிக்கா நாடுகளில் டிப்போ என்ற பெயரில் விற்பனை செய்யப்படும்.

ஃபியட் டிப்போ படங்கள் 

Fiat Tipo sedan details

Related Motor News

மீண்டும் இந்தியாவில் ஃபியட் கார்களை அறிமுகம் செய்ய திட்டமா ?

ஃபியட் கார்களில் இனி இந்த நிறத்தில் கார்கள் வராது ? ஏன் தெரியுமா ?

இந்தியாவின் தேசிய டீசல் என்ஜின் விடைபெறுகிறது – ஃபியட் 1.3 MJD

தொழில்நுட்பட கோளாறு காரணமாக 1.45 மில்லியன் டிரக்களை திரும்ப பெறுகிறது: ஃபியட்

ஃபியட் ஆர்கோ கார் படங்கள் வெளியாகியுள்ளது

ஃபியட் புன்ட்டோ எவோ பியூர் கார் விலை ரூ.4.92 லட்சம்

Tags: Fiat
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ. 28.70 லட்சத்தில் ஃபோர்ஸ் அர்பேனியா டீலக்ஸ் வேன் அறிமுகம்

ரூ. 28.70 லட்சத்தில் ஃபோர்ஸ் அர்பேனியா டீலக்ஸ் வேன் அறிமுகம்

டிரையம்ப் திரக்ஸ்டன் 400

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!

இந்தியாவில் ரூ.14,800 முதல் டூகாட்டி வாட்ச் விற்பனைக்கு அறிமுகமானது

ரூ.11 கோடி மதிப்புள்ள பரிகளுடன் எம்ஜி இந்தியாவின் மிட்நைட் கார்னிவல்..!

ஹூண்டாய் டிசம்பர் டிலைட்டில் ரூ.85,000 வரை அதிரடி தள்ளுபடி.!

மிரள வைக்கும் நுட்பத்துடன் “இந்திரஜால் ரேஞ்சர்” நடமாடும் ட்ரோன் எதிர்ப்பு வாகனம்

அக்டோபர் 2027 முதல் புதிய Bharat NCAP 2.0 பாதுகாப்பில் அடுத்த புரட்சி.!

50,000 வின்ட்சர்.EV கார்களை விற்பனை செய்த எம்ஜி மோட்டார்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan