Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

hero electric ae-47: 160 கிமீ ரேஞ்சு .., ஹீரோ எலெக்ட்ரிக் AE-47 மின்சார பைக் அறிமுகம்

by MR.Durai
5 February 2020, 1:55 pm
in Auto Expo 2023, Bike News
0
ShareTweetSend

ஹீரோ எலெக்ட்ரிக் AE-47

ஹீரோ எலெக்ட்ரிக் வாகன நிறுவனத்தின் புதிய அறிமுகமாக வெளியிடப்பட்டுள்ள புதிய ஹீரோ AE-47 மின்சார பைக் சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 160 கிமீ ரேஞ்சை ஈக்கோமோட் மூலமாக வழங்குவதுடன், அதிகபட்சமாக மணிக்கு 85 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனை பெற்றுள்ளது.

இப்போதைக்கு, AE-47 இப்போது காட்சிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம். இந்த மின்சார பைக் விலை ரூ 1.25 லட்சம் – ரூ. 1.50 லட்சத்திற்குள் அமையலாம்.

ஹீரோ எலக்ட்ரிக் ஏ.இ – 47 பைக்கில் உள்ள 4 கிலோ வாட் எலக்ட்ரிக் மோட்டார் மூலம் இயக்கப்படுகிறது, இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 85 கிமீ ஆகும். AE-47 இலகுவாக நீக்கும் வகையிலான லித்தியம் அயன் 48V / 3.5 kWh பேட்டரியைக் கொண்டுள்ளது. நான்கு மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்ய முடியும். AE-47 இரண்டு விதமான ரைடிங் முறைகளைக் கொண்டுள்ள ஏஇ-47 பைக்கில் பவர் மற்றும் ஈக்கோ மோட் உள்ளது.  ஈக்கோ மோடில் பயணித்தால் அதிகபட்சமாக 160 கிமீ ரேஞ்சு வழங்கும். பவர் மோடில் பயணித்தால் 85 கிமீ ரேஞ்சு வழங்கும்.

ஹீரோ எலெக்ட்ரிக் AE-47

ஹீரோ AE-47 மின்சார பைக்கில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், கீலெஸ் என்ட்ரி, மொபைல் சார்ஜர், வாக் அசிஸ்ட் மற்றும் ரிவர்ஸ் மோட்அம்சத்தைக் கொண்டுள்ளது. மின்சார மோட்டார் சைக்கிள் ஜிபிஎஸ், ஜிபிஆர்எஸ் வசதி, நிகழ்நேர கண்காணிப்பு மற்றும் ஜியோ-ஃபென்சிங் ஆகியவற்றைக் கொண்ட மொபைல் ஆப் மூலம் ஆதரிக்கப்படுகிறது.

ae-47 bike

ஹீரோ எலெக்ட்ரிக் AE-47v

Related Motor News

ஹீரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை உயர்த்தப்படாது

எலக்ட்ரிக் வாகனங்களுக்கு 100% வரி விலக்கு: தமிழக அரசு

மின்சார பைக் உட்பட இரண்டு உயர் வேக ஸ்கூட்டரை வெளியிடும் ஹீரோ எலெக்ட்ரிக் – ஆட்டோ எக்ஸ்போ 2020

ரிவோல்ட் ஆர்வி400 சவால்.., ஹீரோ எலெக்ட்ரிக் பைக் படம் வெளியானது

ரூ. 29,990 ஆரம்ப விலையில் ஹீரோ எலக்ட்ரிக் ஃப்ளாஷ் இ-ஸ்கூட்டர் கிடைக்கிறது

ரூ.62,000 விலையில் ஹீரோ டேஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமானது

Tags: Hero ElectricHero Electric AE-47
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

new harley davidson x440t

புதிய ஸ்டைலில் ஹார்லி-டேவிட்சன் X440 T வெளியானது

2026 hero xoom 110

புதிய நிறங்களில் 2026 ஹீரோ ஜூம் 110 விற்பனைக்கு அறிமுகமானது

மீட்டியோர் 350-ல் டியூப்லெஸ் ஸ்போக் வீலுடன் ஸ்பெஷல் எடிசனை வெளியிட்ட ராயல் என்ஃபீல்டு

சுசூகி ஹயபுசா ஸ்பெஷல் எடிஷன் எலெக்ட்ரானிக் அம்சங்களுடன் அறிமுகம்!

யமஹா XSR155 வாங்குவதற்கு முன் தெரிந்திருக்க வேண்டியவை.!

க்ரூஸ் கண்ட்ரோலுடன் 2026 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R 4V அறிமுகமானது

இந்தியாவில் யமஹா ஏரோக்ஸ் எலக்ட்ரிக் அறிமுகமானது

160கிமீ ரேஞ்சுடன் யமஹா EC-06 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியானது

₹ 1.17 லட்சத்தில் யமஹா FZ ரேவ் விற்பனைக்கு வெளியானது

ரூ.1.50 லட்சத்தில் யமஹா XSR155 இந்தியாவில் விற்பனைக்கு வெளியானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan