ரெனோ க்விட் அவுட்சைடர் கான்செப்ட் அறிமுகம்

0

பிரேசிலில் நடைபெற்ற வரும் சாவ் பாவ்லோ ஆட்டோமொபைல் கண்காட்சி அரங்கில் ரெனோ க்விட் அவுட்சைடர் கான்செப்ட் மாடல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கிளைம்பர் கான்செப்ட் மாடலை சார்ந்த க்விட் அவுட்சைடர் மாடலின் தோற்றத்தில் பெரிய மாற்றங்கள் இல்லை.

கடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2016 ஆட்டோமொபைல் கண்காட்சி அரங்கில் வெளியான ரெனோ கிளைம்பர் கான்செப்ட் மாடலை சார்ந்ததாகவே அமைந்துள்ள அவுட்சைடர் கான்செப்டில் பெரிய வீல் , ஸ்கிட் பிளேட் , பாடி கிளாடிங் , பின்புறத்தில் வாசர் மற்றும் வைப்பர் மற்றும் டிஃபோகர் போன்றவற்றை பெற்றுள்ளது.

Google News

உட்புறத்தில் சில கூடுதலான மாற்றங்களை பெற்று இரட்டை காற்றுப்பை , அனலாக் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் , தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்றவற்றை பெற்று விளங்குகின்றது.

இந்தியாவில் மாபெரும் வெற்றி பெற்ற ரெனோ க்விட் மாடல் பிரேசில் தவிர மேலும் தென் அமெரிக்கா நாடுகளில் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்தியாவில் ரெனோ க்விட் 0.8 லி மற்றும் 1.0 லி பெட்ரோல் எஞ்சின் மாடல்களில் கிடைக்கின்றது.

ரெனோ க்விட் அவுட்சைடர் படங்கள்

படங்கள் ; Autos Segredos