2020 ஹோண்டா ஜாஸ் காரின் முதல் டீசர் வெளியானது

0

ஜாஸ் டீசர்

நான்காம் தலைமுறை ஹோண்டா ஜாஸ் காரின் முதல் டீசர் வெளியானதை தொடர்ந்து அக்டோபர் 23 ஆம் தேதி டோக்கியோ மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. முந்தைய தலைமுறை மாடலை விட தற்பொழுது முற்றிலும் மேம்பட்ட இன்டிரியருடன் தோற்ற அமைப்பிலும் குறிப்பிடதக்க மாற்றங்களை பெற்றிருக்கும்.

Google News

ஹோண்டா ஃபிட் என்ற பெயரில் ஜப்பானிலும், ஐரோப்பியா உட்பட இந்திய சந்தையிலும் ஜாஸ் என்ற பெயரில் விற்பனைக்கு கிடைக்கின்ற இந்த மாடல் இந்தியாவில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அல்லது 1.5 லிட்டர் டீசல் என்ஜின் என இரு ஆப்ஷனில் கிடைக்கின்றது. புதிதாக வரவிருக்கும் ஜாஸ் காரின் தோற்ற அமைப்பு விற்பனையில் உள்ள புதிய சிவிக், சிஆர்-வி காரிலிருந்து பெற்றதாக வரவுள்ளது.

மேலும், இன்டிரியர் அமைப்பில் புதிய தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்ட்டத்துடன், புதிய டிஜிட்டல் கிளஸ்ட்டர் ஆகியவற்றுடன் மிகவும் தாராளமான இடவசதியை பெற்றதாக இந்த கார் விளங்க உள்ளது.

ஐரோப்பா சந்தையை பொருத்தவரை இந்த காரில் இரண்டு மோட்டார் ஹைபிரிட் செட்டப் உடன் கூடிய என்ஜினாக அறிமுகம் செய்யப்படலாம். இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் ஹைபிரிட் அல்லது வெறும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினில் பிஎஸ் 6 மாசு உமிழ்வினை பெறும் வாய்ப்புகள் உள்ளது.

இந்தியாவில் முதற்கட்டமாக 2020 ஹோண்டா சிட்டி கார் வெளியாக உள்ளதை தொடர்ந்து புதிய ஜாஸ் வெளியாகலாம். 2020 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ஹோண்டா நிறுவனம் பங்கேற்கவில்லை.