புத்தம் புதிய (டைகா) ரெனால்ட் டஸ்ட்டர் எஸ்யூவி அறிமுகம் – 2017 பிராங்பேர்ட் மோட்டார் ஷோ

0

2017 பிராங்ஃபர்ட் மோட்டார் ஷோவில் பார்வைக்கு வரவுள்ள புத்தம் புதிய ரெனால்ட் டஸ்ட்டர் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரெனால்ட் குழுமத்தின் டைகா பிராண்டில் டஸ்ட்டர் மாடலாக வெளியிடப்பட்டுள்ளது.

ரெனால்ட் டஸ்ட்டர் எஸ்யூவி

சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் மிக சிறப்பான வரவேற்பினை பெற்ற எஸ்யூவி மாடலாக விளங்கும் டைகா டஸ்ட்டர் மாடல் முற்றிலும் மேம்படுத்தப்பட்டு பல்வேறு வசதிகளை பெற்றதாக வெளியிடப்பட்டுள்ளது.

 

ரெனோ டைகா பிராண்டில் 2010 ஆம் ஆண்டு முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்ட டஸ்ட்டர் 7 ஆண்டுகளுக்கு பிறகு தோற்ற அமைப்பு மற்றும் கேபின் உள்ளிட்ட இடங்களில் பல்வேறு நவீன வசதிகளை கொண்டதாக டைகா டஸ்ட்டர் வெளியிடப்பட்டுள்ளது.

தோற்ற அமைப்பில் முகப்பில் மிக அகலமான கிரில் அமைப்புடன் பகல் நேர எல்இடி ரன்னிங் விளக்குகளுடன், விண்ட்ஸ்கிரின் 100மிமீ வரை முன்பக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதால் கூடுதல் இடவசதி கொண்ட கேபின் பெற்றுள்ளது. பக்கவாட்டில் மிக நேர்த்தியான டிசைன் பெற்ற 17 அங்குல அலாய் வீல் பெற்று முன் மற்றும் பின் பம்பர்களில் சிறிய அளவில் மாற்றங்களை கொண்டுள்ளது.

 

இன்டிரியர் கேபினில் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட வசதிகளுடன் இரு வண்ண கலவையிலான டேஸ்போர்டினை பெற்றதாக வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சர்வதேச அளவில் எஞ்சின் தேர்வுகளில் எவ்விதமான மாற்றங்களும் இடம்பெற வாய்ப்பில்லை என்பதனால் தற்போது பயன்பாட்டில் உள்ள பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சினை பெற்றதாகவே டைகா டஸ்ட்டர் தொடர உள்ளது.

2018 ரெனால்ட் டஸ்ட்டர்

இந்தாண்டின் இறுதியில் இந்திய சந்தையில் ரெனால்ட் கேப்டூர் எஸ்யூவி வெளியிட்டப உள்ளதால் அடுத்த ஆண்டில் டெல்லியில் நடைபெற உள்ள 2018 ஆட்டோ எக்ஸ்போ வாகன கண்காட்சியில் காட்சிக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படும், அதனை தொடர்ந்து 2018 ரெனோ டஸ்ட்டர் விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

2018 Renault (Daica) Duster Image gallery