இம்பீரியல் 400 பைக்கிற்கு முன்பதிவை துவங்கிய பெனெல்லி

0

 benelli-IMPERIALE-400

பெனெல்லி நிறுவனத்தின் ரெட்ரோ ஸ்டைலை பெற்ற இம்பீரியல் 400 பைக்கிற்கான முன்பதிவு துவங்கியுள்ளது. ரூ.4,000 முன்பதிவு கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது. அக்டோபர் மாத இறுதியில் விற்பனைக்கு வரவுள்ள நிலையில் முன்பதிவு இந்நிறுவனத்தின் இணையதளம் மற்றும் டீலர்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. 1950 ஆம் ஆண்டு இந்நிறுவனம் தயாரித்த பெனெல்லி மோட்டோ பை என்ற பைக்கின் உந்துதலில் ரெட்ரோ ஸ்டைலைப் பெற்று ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350, ஜாவா 42, ஜாவா பைக்குகளுக்கு போட்டியாக வரவுள்ளது.

Google News

சிவப்பு, கருப்பு மற்றும் சில்வர் என மூன்று நிறங்களில் வரவுள்ள இந்த மாடலில் முன்புறத்தில் வட்ட வடிவ ஹெட்லைட், வட்ட வடிவத்திலான இன்டிகேட்டர், க்ரோம் பூச்சு பெற்ற ஃபென்டணர், ஸ்போக்டூ வீல் உட்பட ட்வீன் பாட் கொண்ட இண்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரை பெற உள்ளது.

இம்பீரியல் 400 பைக்கில் 373.5 சிசி ஒற்றை சிலிண்டர் SOHC என்ஜினை பெற்றிருக்கின்றது. இந்த என்ஜின் 19 பிஹெச்பி அதிகபட்ச சக்தியையும் 28 என்எம் டார்க்கையும் வழங்குகின்றது. 5 வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இம்பீரியல் 400 பைக்கின் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்ஸ் மற்றும் பின்புறத்தில் இரட்டை ஷாக் அப்சார்பரினை பெற்று வருகிறது. இரட்டை சேனல் ஏபிஎஸ் பொருத்தப்பட்ட இரு டயர்களிலும் டிஸ்க் பிரேக்கினை பெற்றுள்ளது.

இந்தியாவில் பெனெல்லி இம்பீரியல் 400 பைக்கின் விலை ரூ.2 லட்சம் முதல் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அக்டோபர் மாத இறுதியில் விற்பனைக்கு வெளியிடப்பட்டு தீபாவளி முதல் டெலிவரி தொடங்கப்படலாம்.

benelli imperiale 400 red benelli IMPERIALE 400 bike  benelli-IMPERIALE-400