ஹீரோ பிளெஷர்+ பிளாட்டினம் விற்பனைக்கு வெளியானது

0

Hero Pleasure plus Platinum

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பிளெஷர்+ ஸ்கூட்டரின் அடிப்படையில் பிளெஷர்+ பிளாட்டினம் சிறப்பு எடிசன் ரூ.60,950 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யபட்டுள்ளது.

Google News

சாதாரண மாடலை விட பிரீமியம் தோற்ற பொலிவினை பெற்று கருப்பு மற்றும் பிரவுன் நிறத்துடன் அமைந்துள்ளது. மிரர், சைலென்ஷர் மஃப்லர், கைப்பிடி மற்றும் ஃபென்டர் போன்றவற்றில் க்ரோம் பாகங்கள் பெரும்பாலும் இணைக்கப்பட்டுள்ளது.  இரு வண்ண இருக்கை, இருக்கை பேக் ரெஸ்ட் மற்றும் குறைந்த மைலேஜ் இன்டிகேட்டர் வசதி போன்றவற்றை பெற்றுள்ளது.

ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் பெற்றதாக 110.9 சிசி என்ஜின் கொண்டிருக்கின்ற  இந்த ஸ்கூட்டர் அதிகபட்சமாக 8 hp குதிரைத்திறன் மற்றும் 8.7Nm டார்க் வழங்கவல்லதாக விளங்குகின்றது. இதில் சிவிடி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

மற்றபடி பேஸ் வேரியண்ட்டை விட ரூ.2,000 வரை விலை கூடுதலாக அமைந்துள்ளது. சமீபத்தில் ஹீரோ கிளாமர் பிளேஸ் மற்றும் மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்டெல்த் போன்றவை விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

ஹீரோ பிளெஷர்+ பிளாட்டினம் ஸ்கூட்டரின் விலை ரூ.60,950 (விற்பனையக விலை டெல்லி) ஆகும்.

web title : Hero Pleasure+ Platinum launched in India, priced at Rs 60,950

For the latest Tamil auto news and Bike reviews, follow automobiletamilan.com on TwitterFacebook, and subscribe to our YouTube channel.