சாலை சோதனை ஓட்டத்தில் சுசூகி பர்க்மேன் ஸ்ட்ரீட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

0

suzuki burgman electric spied 1

நாட்டில் எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை எண்ணிக்கை அதிகரிக்க துவங்கியுள்ள நிலையில், சுசூகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் பர்க்மேன் ஸ்ட்ரீட் பெட்ரோல் ஸ்கூட்டரின் அடிப்பையிலான பேட்டரியில் இயங்கும் ஸ்கூட்டரை கடந்த சில மாதங்களாகவே மிக தீவரமாக சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தி வருகின்றது.

ஸ்டைலிங் அம்சங்களை பொறுத்தவரை, நேரடியாக பெட்ரோல் ஸ்கூட்டரை தழுவியதாக அமைந்துள்ள நிலையில், பின்புறத்தில் இரண்டு சஸ்பென்ஷன்களை கொடுத்துள்ளது. மற்றபடி எந்த மாற்றங்களும் இல்லை.

சுசூகி நிறுவனத்தின் முதல் பேட்டரி ஸ்கூட்டர் மாடலாக விளங்குகின்ற பர்க்மேன் ஸ்ட்ரீட் டெக்னிக்கல் சார்ந்த எந்த தகவலும் இல்லை. குறிப்பாக பேட்டரி ரேஞ்சு, சார்ஜிங் நேரம் உள்ளிட்ட எந்த நுட்பவிபரமும் தற்போது வரை கிடைக்கவில்லை.

இந்த ஆண்டின் மத்தியில் அல்லது இறுதிக்குள் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. முதற்கட்டமாக குறிப்பிட்ட சில முன்னணி நகரங்களுக்கும் பிறகு படிப்படியாக விற்பனைக்கு விரிவுப்படுத்தலாம். தற்போது நாட்டில் கிடைக்கின்ற டிவிஎஸ் ஐக்யூப், பஜாஜ் சேட்டக், ஏத்தர் 450எக்ஸ் ஆகியவற்றை எதிர்கொள்ளலாம்.

image source: motorbeam/instagram