டைம்லர் சூப்பர் ஹை டெக் கோச் பஸ் விற்பனைக்கு வந்தது

டைம்லர் நிறுவனம், இந்தியாவில் 15 மீட்டர் நீளம் கொண்ட சொகுசு வசதிகளை பெற்ற ஆட்டோ கோச் பெற்ற மெர்சிடிஸ்-பென்ஸ் 2441 சூப்பர் ஹை டெக் பஸ் சென்னையில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் பேருந்து விற்பனை அமோக வளர்ச்சி பெற்று வருகின்றது.

மெர்சிடிஸ்-பென்ஸ் 2441 சூப்பர் ஹை டெக் பஸ்

கடந்த 2016 ஆம் ஆண்டில் 506 பேருந்துகளைப் பென்ஸ் விற்பனை செய்திருந்த நிலையில் , 2017 ஆம் ஆண்டின் முடிவில் 906 பேருந்துகளை டைம்லர் பஸ் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.

சென்னையில் அமைந்துள்ள பேருந்து மற்றும் டிரக் தயாரிப்புத் தொழிற்சாலையில், பாரத் பென்ஸ் டிரக்குகள் , பேருந்து மற்றும் அடிச்சட்டம் பாரத் பென்ஸ் பெயரில் 9, 16 மற்றும் 24 டன் பேருந்துகள், மேலும் மல்டி ஆக்சில் பெற்ற மெர்சிடிஸ்-பென்ஸ் 9, 16 மற்றும் 24 டன் சொகுசு பேருந்துகளைத் தயாரித்து வருகின்றது.

தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள 15 மீட்டர் நீளம் கொண்ட 2441 சூப்பர் ஹை டெக் பஸ் அலுமியம் பாடி கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதால் இலகு எடை கொண்டதாக விளங்குகின்ற இந்தப் பேருந்தில் 402 பிஹெச்பி பவரை வெளிப்படுத்தும் OM457 LA எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்தப் பேருந்தில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

மிகச் சிறப்பான சொகுசு அம்சத்தைப் பெற்றதாக விளங்கும் இந்தப் பேருந்தில் 59 புஸ்பேக் பயணிகள் இருக்கை வழங்கப்பட்டு 14 கியூபிக் மீட்டர் லக்கேஜ் பரப்பளவு வழங்கப்பட்டுள்ளது. உயர்தர பாதுகாப்பினை வழங்கும் வகையிலான உயர் ரகப் பிரேக் மற்றும் பாதுகாப்பான இடத்தில் அமைந்துள்ள எரிபொருள் டேங்கினை கொண்டுள்ளது.