ஆட்டோ எக்ஸ்போவில் மஹிந்திரா க்ரூஸியோ பஸ் வெளியானது

0

mahindra cruzio

மஹிந்திரா டிரக் மற்றும் பஸ் பிரிவின் கீழ் முதல் பயணிகள் பேருந்து க்ரூஸியோ மற்றும் க்ரூஸியோ கிராண்டே என 15 முதல் 65 இருக்கைகள் கொண்ட வரிசையை ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிடப்பட்டுள்ளது.

டிரக் மற்றும் பஸ் உட்பட சிறிய ரக வர்த்தக வாகனங்கள் பிரிவில் மஹிந்திரா சிறப்பான வளர்ச்சி அடைந்து வருகின்றது. அந்த வகையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள க்ருஸியோ மற்றும் க்ரூஸியோ கிராண்டே அற்புதமான வரவேற்பினை பெறும் என இந்நிறுவனம் நம்புகின்றது.

இந்த மாடல் எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. டர்போ, ஹெவி மற்றும் லைட் என மூன்று டிரைவிங் முறையை கொண்டுள்ளது. ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வரவுள்ள BS-VI முறைக்கு ஏற்ற mPOWER மற்றும் MDI இயந்திரங்களுடன் FUELSMART தொழில்நுட்பம் கொண்டுள்ளது.