ரெனால்ட் கைகெர் கான்செப்ட் எஸ்யூவி அறிமுகம்

0

renault kiger suv concept

இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள ரெனால்ட் கைகெர் (Renault Kiger) எஸ்யூவி காரின் கான்செப்ட் நிலை மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மிக நேர்த்தியான டிசைன் அம்சத்தை பெற்று முரட்டுத்தனமாக காட்சியளிக்கும் வகையிலான கிரில், பம்பர் இணைக்கப்பட்டுள்ளது.

Google News

நவம்பர் 26 ஆம் தேதி விற்பனைக்கு வரவுள்ள நிசான் மேக்னைட் காரின் அதே ரெனோ-நிசான் கூட்டு நிறுவனத்தின் CMFA+ பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட உள்ள கிகர் எஸ்யூவி காரில் இரண்டு பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் மட்டும் இடம்பெற்றிருக்கும். டீசல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட வாய்ப்பில்லை. இதற்கு முன்பாக இந்த பிளாட்ஃபாரத்தில் எம்பிவி ரக ட்ரைபர் கார் வெளியிடப்பட்டுள்ளது.

ரெனோ இந்தியா மற்றும் பிரான்ஸ் என இரு நிறுவனங்களும் இணைந்த டிசைன் குழுவால் வடிவமைக்கப்பட்டுள்ள கிகர் காரில் முன்புற அமைப்பில் மிக நேர்த்தியான இரண்டு பிரிவுகளை பெற்ற எல்இடி ரின்னிங் விளக்குகள் மற்றும் எல்இடி புராஜெக்டர் ஹெட்லைட் கீழ் பம்பரில் இணைக்கப்பட்டுள்ளது. மிதக்கும் வகையில் மேற்கூறையை வெளிப்படுத்த சி பில்லரில் கருமை நிறம், 16 அங்குல அலாய் வீல், மிக நேர்த்தியான எல்இடி டெயில் லைட் இணைந்துள்ளது.

renault kiger suv concept side

இன்டிரியரில் பெரும்பாலான அம்சங்கள் விற்பனையில் உள்ள ட்ரைபர் காரினை போலவே அமைந்திருக்கும். குறிப்பாக தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் டாப் வேரியண்டில் வழங்கப்பட்டு ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே போன்றவற்றுடன் கனெக்ட்டிவிட்டி அம்சங்களும் இணைக்கப்பட்டிருக்கும்

ரெனால்ட் கிகர் இன்ஜின்

மேக்னைட் காரில் இடம்பெற்றுள்ள இன்ஜின் ஆப்ஷன பெற உள்ள ரெனால்ட் கிகர் எஸ்யூவி காரில் 1.0 லிட்டர் HRA0 டர்போ பெட்ரோல் என்ஜின் 100 hp பவரை 5,000rpm மற்றும் 160 Nm டார்க் 2,800-3,600 rpm-ல் (152Nm – CVT) வழங்குகின்றது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. மேனுவல் கியர்பாக்ஸ் மைலேஜ் லிட்டருக்கு 20 கிமீ எனவும், சிவிடி கியர்பாக்ஸ் கொண்ட மாடல் லிட்டருக்கு 17.7 கிமீ மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்து, பேஸ் வேரியண்டுகளில் 1.0 லிட்டர் B4D பெட்ரோல் என்ஜின் 72hp பவரை 6,250rpm-லும், 96 Nm டார்க்கினை 3,500rpm-ல் வழங்கக்கூடிய மாடலில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் உள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக லிட்டருக்கு 18.75 கிமீ மைலேஜ் வழங்குகின்றது

renault kiger concept

இந்தியாவில் 2021 ஆம் ஆண்டின் துவக்க மாதங்களில் ரெனால்ட் கிகர் (Renault Kiger) எஸ்யூவி ரூ.5.60 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடப்படலாம். மேலும் இந்த மாடலுக்கு போட்டியாக விட்டாரா பிரெஸ்ஸா, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், ஹூண்டாய் வென்யூ, டாடா நெக்ஸான்மஹிந்திரா எக்ஸ்யூவி 300, கியா சொனெட் மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஆகியவற்றுடன் மேக்னைட்டினை எதிர்கொள்ள உள்ளது.

renault kiger suv rear

web title : Renault Kiger suv concept revealed