Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

213 கிமீ ரேஞ்சு.., மேம்பட்ட டாடா டிகோர் EV தனிநபர்கள் விற்பனைக்கும் அறிமுகம்

by MR.Durai
9 October 2019, 6:11 pm
in Car News
0
ShareTweetSend

tigor ev

முன்பாக டாக்சி சந்தையில் வெளியிடப்பட்ட டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் தற்பொழுது அதிகபட்சமாக 213 கிமீ ரேஞ்சு வரை உயர்த்தப்பட்டு தனிநபர் பயன்பாட்டிற்கு ஏற்றதாக விற்பனைக்கு ரூ.12.59 லட்சம் முதல் ரூ.12.91 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) வரையில் மூன்று விதமான வேரியண்டில் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பாக டாக்சி மற்றும் ஃபிளீட் ஆப்ரேட்டர்களுக்கு வெளியிடப்பட்ட டிகோர் மின்சார காருக்கு ஃபேம் 2ஆம் கட்ட சலுகைகள் மூலம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.9.44 லட்சத்தில் தொடங்குகின்றது. முந்தைய மாடலை விட அதிகபட்சமாக ரூ.27,000 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. 30 நகரங்களில் இந்த வாகனங்கள் கிடைக்க உள்ளது. மேலும் முந்தைய மாடலின் ரேஞ்சு வெறும் 143 கிமீ மட்டும் ஆகும். தற்பொழுது, தனிநபர் பயன்பாட்டிற்கு ஃபேம் இரண்டாம் கட்ட சலுகைகள் வழங்கப்படுவதில்லை.

இந்த காரில் வழங்கப்பட்டுள்ள முன்பு 16.2kWh திறன் அமைப்பு இடம்பெற்றிருந்தது, இதற்கு மாற்றாக தற்பொழுது 21.5kWh பேட்டரி திறன் மூலம் இயஙக்கபடுகின்றது. இதில் உள்ள  72V, 3-பேஸ் AC இன்டக்‌ஷன் மோட்டார் அதிகபட்சமாக 30kW (41hp) பவரை 4,500rpm -யிலும் மற்றும் 105Nm டார்க்கை 2,500rpm முறையில் வழங்குகின்றது. சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 213 கிமீ வரை பயணிக்கலாம் ARAI சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது (முன்பு 142 கிமீ ஆக இருந்தது). இந்த பேட்டரி பேக்கை ஒரு நிலையான ஏசி சார்ஜர் வழியாக 6 மணி நேரத்தில் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும், ஒரு டிசி 15 கிலோவாட் வேகமான சார்ஜர் வாயிலாக இதனை 90 நிமிடங்களில் பெற முடியும். தற்போது டிரைவ் மற்றும் ஸ்போர்ட் மோட் என இரண்டையும் பெற்றுள்ளது.

மூன்று விதமாக வழங்கப்பட்டுள்ள வேரியண்ட் டிகோர் EV XE+, டிகோர் EV XM+ மற்றும் டிகோர் EV XT+ ஆகும். மூன்றிலும் பொதுவாக AIS-145 அடிப்படை பாதுகாப்பு விதிகளுக்கு ஏற்ப இரட்டை முன் ஏர்பேக்குகள் (XE+ மாடலில் மட்டும் ஒற்றை ஏர்பேக்), ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பின்புற பார்க்கிங் சென்சார்கள் இருக்கை பட்டை நினைவூட்டல் போன்றவை இடம்பெற்றுள்ளது.

விற்பனையில் உள்ள பெட்ரோல் , டீசல் மாடல்களில் உள்ள XM, XT அடிப்படையில் வந்துள்ள இந்த எலெக்ட்ரிக் வெர்ஷனில் 14 அங்குல அலாய் வீல், ஹார்மன் நிறுவன 2 டின் ஆடியோ சிஸ்டத்துடன் புளூடூத், யூ.எஸ்.பி மற்றும் ஆக்ஸ் தொடர்புகள், பவர் விண்டோஸ் மற்றும் பவர் விங் மிரர் போன்றவற்றை கொண்டுள்ளது.

tata tigor ev

டாடா டிகோர் EV விலை பட்டியல்

XE+ XM+ XT+
டெல்லி தனிநபர் விலை ரூ.13.09 லட்சம் ரூ.13.26 லட்சம் ரூ. 13.41 லட்சம்
இந்தியா தனிநபர் விலை ரூ. 12.59 லட்சம் ரூ.12.76 லட்சம் ரூ. 12.91 லட்சம்

(எக்ஸ்ஷோரூம் விலை)

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், சமீபத்தில் ஜிப்டிரான் என்ற எலக்ட்ரிக் வாகன நுட்பத்தை வெளிப்படுத்தியது. அடுத்த 18 மாதங்களுக்கு நெக்ஸான் எலக்ட்ரிக் எஸ்யூவி உட்பட நான்கு மின்சார கார்களை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

Related Motor News

டாடா டிகோர் காரின் முக்கிய சிறப்பு அம்சங்கள்

1 லட்சம் எலக்ட்ரிக் கார்களை தயாரித்த டாடா மோட்டார்ஸ்

எம்ஜி காமெட் EV Vs போட்டியாளர்கள் – சிறந்த எலக்ட்ரிக் கார் எது ?

315 கிமீ ரேஞ்சு.., டாடா டிகோர் EV கார் விற்பனைக்கு வந்தது

டாடா டிகோர் மின்சாரக் காரின் விலை ரூ.80,000 குறைந்தது

ரூ.9.99 லட்சத்தில் டாடா டிகோர் மின்சார கார் விற்பனைக்கு வெளியானது

Tags: Tata Tigor EV
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

மாருதி சுசூகியின் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி eவிட்டாரா அறிமுகமானது

செப்டம்பர் 3., மாருதி சுசூகியின் இ-விட்டாரா விற்பனைக்கு அறிமுகம்.!

Range Rover Velar Autobiography

ரூ.89.90 லட்சத்தில் ரேஞ்ச் ரோவர் வேலார் ஆட்டோபையோகிராபி வெளியானது

சொகுசான பயணத்துக்கு எம்ஜி M9 விலை ஜூலை 21 வெளியாகும்

இந்தியாவில் ரூ.46.90 லட்சத்தில் புதிய BMW 2 சீரிஸ் கிரான் கூபே அறிமுகம்

2025 மாருதி சுசூகியின் பலேனோ காரில் 6 ஏர்பேக்குகள் அறிமுகம்

6 ஏர்பேக்குடன் புதிய மாருதி சுசூகி எர்டிகா விற்பனைக்கு வெளியானது

6 இருக்கை டெஸ்லா மாடல் Y L எஸ்யூவி அறிமுகமானது

டெஸ்லா மாடல் ஓய் பற்றி அறிந்து கொள்ள வேண்டியவை.!

ஜீப் மெர்டியன், காம்பஸ் ட்ரெயில் எடிசன் வெளியானது

கியாவின் 7 இருக்கை காரன்ஸ் கிளாவிஸ் EV காரின் முக்கிய சிறப்பம்சங்கள்

அடுத்த செய்திகள்

மாருதி சுசூகியின் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி eவிட்டாரா அறிமுகமானது

செப்டம்பர் 3., மாருதி சுசூகியின் இ-விட்டாரா விற்பனைக்கு அறிமுகம்.!

Range Rover Velar Autobiography

ரூ.89.90 லட்சத்தில் ரேஞ்ச் ரோவர் வேலார் ஆட்டோபையோகிராபி வெளியானது

எஸ்யூவி பிரிவில் மிக விரைவாக 6 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த டாடா பஞ்ச்

எஸ்யூவி பிரிவில் மிக விரைவாக 6 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த டாடா பஞ்ச்

mg m9 electric mpv

சொகுசான பயணத்துக்கு எம்ஜி M9 விலை ஜூலை 21 வெளியாகும்

2025 BMW 2 Series Gran Coupe car

இந்தியாவில் ரூ.46.90 லட்சத்தில் புதிய BMW 2 சீரிஸ் கிரான் கூபே அறிமுகம்

ரூ.1.99 லட்சத்தில் 2025 கீவே RR 300 விற்பனைக்கு அறிமுகமானது

ரூ.1.99 லட்சத்தில் 2025 கீவே RR 300 விற்பனைக்கு அறிமுகமானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan