ஹூண்டாய் இந்தியாகொரியா நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் 19 ஆண்டுகளில் 50 லட்சம் கார்களை இந்திய சந்தையில் வெற்றிகரமாக விற்பனை செய்துள்ளது.

ஹூண்டாய் இந்தியா

கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பாக இந்திய சந்தையில் களமிறங்கிய ஹூண்டாய் நிறுவனம் சான்ட்ரோ கார் வாயிலாக இந்தியர்கள் மனதை வென்று இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய கார் தயாரிப்பாளராக விளங்குகின்றது.

கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் 10 லட்சம் கார்களை விற்பனை செய்திருந்த இந்நிறுவனம் அடுத்த 2010 ஆம் ஆண்டில் 20 லட்சம் கார்கள், ஜூலை 2013-யில் 30 லட்சம் கார்கள், 2015-யில் 40 லட்சம் கார்கள் அதனை தொடர்ந்து 2017ல் 50 லட்சம் கார்களை விற்பனை செய்து புதிய சாதனையை படைத்துள்ளது.

2020 ஆம் ஆண்டுக்குள் 8 புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.