இந்தியாவின் டாப் 10 பைக் நிறுவனங்கள் பட்டியல் வெளியானது

0

ஹீரோ மோட்டோகார்ப்

உலகின் மிகப்பெரிய இருசக்கர வாகன சந்தையாக விளங்கும் இந்தியாவின் 2019 நிதியாண்டில் டாப் 10 பைக் நிறுவனங்களின் பட்டியல் மற்றும் விற்பனை எண்ணிக்கை உள்ளிட்ட பல்வேறு முக்கிய விபரங்களை காணலாம்.  ஹோண்டா டூ வீலர்ஸ் மற்றும் மஹிந்திரா நிறுவனம் 2019 ஆம் நிதி வருடத்தில் சரிவினை கண்ட முக்கிய நிறுவனங்களாகும்.

Google News

நாட்டின் மிகப்பெரிய இரு சக்கர வாகன தயாரிப்பாளராக இந்தியாவின் ஹீரோ மோட்டோகார்ப் விளங்குகின்றது. 5வது இடத்தில் பிரசத்தி பெற்ற ராயல் என்ஃபீல்டு 8,05,273 விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. மற்ற முன்னணி நிறுவனங்களை விட சுசூகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் தொடர்ந்து சிறப்பான வளர்ச்சி பெற்று கடந்த நிதியாண்டில் 33.44 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது.

honda navi

டாப் 10 பைக் நிறுவனங்கள் – இந்தியா FY2019

சியாம் எனப்படும் இந்திய ஆட்டோமொபைல் சம்மேளனம் ( Society of Indian Automobiles -SIAM) வெளியிட்டுள்ள விற்பனை தொடர்பான அறிக்கையில்,  ஒற்றை இலக்க வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த ஏப்ரல் 2018 முதல் ஏப்ரல் 2019 வரையிலான நிதி வருடத்தில் இந்தியாவின் மொத்த இரு சக்கர வாகன விற்பனை எண்ணிக்கை 2,11,81,390 ஆகும். இது முந்தைய ஆண்டை விட 4.86 சதவீத வளர்ச்சியாகும். கடந்த 2018 ஆம் நிதி வருடத்தில் மொத்த  டூ வீலர் விற்பனை எண்ணிக்கை 2,02,00,117 ஆகும்.

2019 Suzuki Intruder

கடந்த 2019 ஆம் நிதி வருடத்தில் மிகப்பெரிய விற்பனையில் 33.44 சதவிகித வளர்ச்சியை சுசூகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் பதிவு செய்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு இதே காலகட்டத்தில் 5,01,203 ஆக இருந்த நிலையில், 2019 நிதி வருடத்தில் 6,68,787 என பதிவு செய்துள்ளது.

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய மோட்டார்சைக்கிள் தயாரிப்பாளராக விளங்கும் ஹோண்டா டூ வீலர்ஸ் விற்பனை கடந்த நிதி ஆண்டில், 4.41 சதவீத வீழ்ச்சி அடைந்துள்ளது. அதே போல மஹிந்திரா டூ வீலர்ஸ் கடந்த நிதி ஆண்டில் வெறும் 4004 யூனிட்டுகளை மட்டும் விற்பனை செய்துள்ளது.

வ.எண் தயாரிப்பாளர் FY2019 FY2018 வளர்ச்சி %
1. ஹீரோ மோட்டோகார்ப் 76,12,775 73,82,718 3.12
2. ஹோண்டா டூ வீலர்ஸ் 55,20,617 57,75,287 -4.41
3. டிவிஎஸ் 31,36,532 28,75,466 9.08
4. பஜாஜ் ஆட்டோ 25,41,320 19,74,577 28.70
5. ராயல் என்ஃபீல்டு 8,05,273 8.01,229 0.50
6. யமஹா 8,04,682 7,92,812 1.50
7. சுசூகி மோட்டார்சைக்கிள் 6,68,787 5,01,283 33.44
8. பியாஜியோ 77,775 68,169 14.09
9. மஹிந்திரா 4004 14,752 -72.86
10. கவாஸாகி 3115 1,799 74.51
மற்றவை(Automobile Tamilan) 6510 12,105 -46.20
மொத்தம் 2,11,81,390 2,02,00,117 4.86 %

குறிப்பாக இந்தியாவின் ஸ்கூட்டர் சந்தை 13 ஆண்டுகளுக்கு பிறகு மிகப்பெரிய அளவில் சரிவினை சந்தித்துள்ளது. குறிப்பாக கடந்த மார்ச் மாத விற்பனையில் 25 சதவீதம் வரை ஸ்கூட்டர் விற்பனை சரிந்துள்ளது. ஆனால் 500-800சிசி வரையிலான பிரிமியம் ரக பைக் விற்பனை 130 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது.

கடந்த நிதி ஆண்டின் இறுதி காலாண்டில் அதிகரிக்கப்பட்ட வாகன காப்பீடு கட்டண உயர்விற்கு பின்னர் மிகப்பெரிய விற்பனை இழப்பை இந்திய சந்திக்க தொடங்கியுள்ளது.

Royal enfield bullet trials motorcycle