டாடா மோட்டார்சின் ஆடம்பர பிரிவாக உள்ள இங்கிலாந்தின் ஜாகுவார் லேண்ட்ரோவர் (Jaguar Land Rover – JLR) மீது நிகழ்த்தப்பட்ட சைபர் தாக்குதலால் கடந்த செப்டம்பர் 1 முதல் தற்பொழுது வரை கடும் சவால்களை எதிர்கொண்டு வரும் இந்நிறவனம், உற்பத்தி மற்றும் டீலர்கள் விற்பனை என அனைத்திலும் மிகப்பெரிய சிக்கலை எதிர்கொண்டு வருகின்றது.
இங்கிலாந்து, சீனா, ஸ்லோவோக்கியா, பிரேசில் மற்றும் இந்தியா என உலகில் உள்ள அனைத்து ஜாகுவார் லேண்ட்ரோவரின் உற்பத்தி மற்றும் வாகனப்பதிவு நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தினமும் 1000 கார்கள் வரை தயாரித்து வந்து உற்பத்தி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் theguardian தகவலின் படி தினமும் யூரோ 72 மில்லியன் அல்லது இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.7560 கோடி வரை இழந்து வருவதாக கூறப்படுகின்றது.
பாதிப்படைந்த சிஸ்டங்கள் மற்றும் அது சார்ந்த நுட்பங்கள் என பலவற்றை அனைத்து விட்டு, தனிமைப்படுத்தி ஆய்வு செய்து வரும் நிலையில், சில தரவுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
UK தேசிய சைபர் பாதுகாப்பு மையம் (NCSC) மற்றும் பல பாதுகாப்பு அமைப்புகள் உதவியுடன் மீண்டும் உற்பத்தி துவங்குவதற்கும் பாதிக்கப்பட்ட விபரங்களையும் கண்டறிந்து வருகின்றது.
BBC வெளியிட்ட செய்தியில் இந்த தாக்குதலால் JLR மட்டுமல்லாமல், இதன் உதிரிபாகங்கள் சப்ளையர்களும் கடும் நிதி நெருக்கடியை எதிர்கொள்வதுடன் பணியாளர்களை குறைக்க துவங்கியுள்ளதால், இது தற்காலிகமான பாதிப்பாக அல்லாமல் ஜாகுவார் மீள்வதற்கு மேலும் சில மாதங்கள் தேவைப்படலாம் என கூறப்படுகின்றது.
தற்பொழுது இறுதியாக இந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் செப்டம்பர் 24 முதல் உற்பத்தி துவங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளது.