Site icon Automobile Tamil

ஹீரோ Super Splendor பைக் விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள்

125சிசி சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் Super Splendor பைக்கில் Xtech என்ற கூடுதல் வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது தவிர டிரம், டிஸ்க் பிரேக் என இரு விதமான ஆப்ஷனில் ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதிகளை கூடுதலாக பெற்றுள்ளது.

Super Splendor Xtec மற்றும் Super Splendor என இரு மாடல்களும் பொதுவாக 124.7cc ஒற்றை சிலிண்டர் ஏர் கூல்டு BS6 இன்ஜின் OBD-2 பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 10.72 bhp பவர் 10.6 Nm டார்க் வழங்குகின்றது. இந்த பைக்கில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட டைமண்ட் ஃபிரேம் சேஸ் கொடுக்கப்பட்டு18 இன்ச் வீல் கொடுக்கப்பட்டுள்ள சூப்பர் ஸ்ப்ளெண்டர் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் டூயல் ஷாக் அப்சார்பர் பொருத்தப்பட்டுள்ளது.

சூப்பர் ஸ்பிளெண்டர் மற்றும் எக்ஸ்டெக் என இரண்டு பைக்கிலும் டிரம் பிரேக்குகள் மற்றும் முன்புறத்தில் டிஸ்க் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளில் கிடைக்கிறது. சூப்பர் ஸ்பிளெண்டர் பைக்கிற்கு போட்டியாக ஹோண்டா சிபி ஷைன் 125, பஜாஜ் பல்சர் 125, CT 125X மற்றும் டிவிஎஸ் ரைடர் போன்றவை உள்ளன.

125cc சந்தையில் உள்ள பைக்குகளில் சிறப்பான மைலேஜ் வழங்கும் மாடல்களில் ஒன்றாக விளங்கும் சூப்பர் ஸ்ப்ளெண்டர் பைக் லிட்டருக்கு 68 Km வழங்கும் என இந்நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள எக்ஸ்டெக் வேரியண்டில் ப்ளூடூத் கனெக்ட்டிவ் மூலமாக புதிய எல்சிடி டிஸ்பிளே பெற்ற முழு டிஜிட்டல் கன்சோலையும் இணைத்து சூப்பர் ஸ்பிளெண்டரில் உங்கள் ஸ்மார்ட்போனுடன் இணைக்கப்பட்டுள்ளது இதன் வாயிலாக தவறவிட்ட அழைப்புகள்/SMS விழிப்பூட்டல்கள் வழங்குகிறது. கிளஸ்ட்டரில் ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர், டிரிப்மீட்டர், எரிபொருள் அளவு மற்றும் மைலேஜ் ஆகியவற்றுடன் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலுக்கு கீழே USB சார்ஜிங் போர்ட் உள்ளது.

Hero Super Splendor பைக்கில் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டத்துடன் டிஸ்க் அல்லது டிரம் பிரேக்குடன் 123 கிலோ எடையும், 12 லிட்டர் எரிபொருள் டேங்க் கொள்ளளவும் கொண்டுள்ளது.

(Tamil Nadu Ex-showroom Price Updated)

SUPER SPLENDOR DRUM BRAKE  – ₹ 82,838

SUPER SPLENDOR DISC BRAKE  – ₹ 86,838

SUPER SPLENDOR XTEC DRUM BRAKE – ₹ 85,068

SUPER SPLENDOR XTEC DISC BRAKE – ₹ 89,068

Specification Super Splendor & Super Splendor Xtech
Engine Air-cooled, 4-stroke, single cylinder OHC
Displacement 124.7 cc
Power 10.7 bhp @ 7500 rpm
Torque 10.6 Nm @ 6000 rpm
Fuel system Fuel injection
Transmission 5-speed constant mesh
Suspension (front) Telescopic hydraulic shock absorbers
Suspension (rear) 5-step adjustable hydraulic shock absorbers
Brakes (front) 240 mm disc or 130 mm drum
Brakes (rear) 130 mm drum
Front Tyre 80/100- 18 Tubless
Rear Tyre 100/80- 18 Tubless
Fuel tank capacity 12 liters
Kerb weight 123 kg
Length 2042 mm
Width 752 mm
Height 1092 mm
Wheelbase 1273 mm
Ground clearance 180 mm
Colors Canvas Black, Heavy Grey, Dusky Black, Glaze Black, Nexus Blue, and Candy Blazzing Red
Super Splendor XTech – Gloss Black, Candy Blazzing Red, Matte Axis Grey
Features Digital-analog instrument cluster, side-stand indicator with engine cutoff, i3S technology (idle-stop-start system), alloy wheels, tubeless tires, LED tail lamp, halogen headlamp
Super Splendor XTech – Digital Cluster, Bluetooth connectivity Xtech, LED Headlight

 

 

Hero Super Splendor on-Road price in chennai & Tamilnadu

ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி மற்ற மாவாடங்களுக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து மாறுபடும்.

SUPER SPLENDOR DRUM BRAKE  ₹ 97,531

SUPER SPLENDOR DISC BRAKE  ₹ 1,02,987

ஹீரோ சூப்பர் ஸ்ப்ளெண்டர் XTech on-Road price in chennai & Tamilnadu

SUPER SPLENDOR XTEC DRUM  ₹ 99,605

SUPER SPLENDOR XTEC DISC  ₹ 1,04,112

Super SPLENDOR & Super SPLENDOR Xtech Rivals

சூப்பர் ஸ்பிளெண்டர் மற்றும் சூப்பர் ஸ்பிளெண்டர் எக்ஸ் டெக் பைக்குகளுக்கு போட்டியாக ஹோண்டா சிபி ஷைன் 125, பஜாஜ் பல்சர் 125, CT 125X மற்றும் டிவிஎஸ் ரைடர் ஆகியவற்றை பெற்றுள்ளது.

FAQs about Hero Super Splendor

2023 ஹீரோ SUPER SPLENDOR பைக் விலை ₹ 96,231 முதல் ₹ 1,04,112 வரை நிர்ணையிக்கப்பட்டுள்ளது.

OBD 2 அம்சத்தை பெற்ற அதே 124.7cc சிங்கிள் சிலிண்டர் என்ஜின் பயன்படுத்தியுள்ளது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 10.7 bhp பவர் மற்றும் 10.6 Nm ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.

இந்த மாடலுக்கு போட்டியாக ஹோண்டா சிபி ஷைன் 125, பஜாஜ் பல்சர் 125, CT 125X மற்றும் டிவிஎஸ் ரைடர் ஆகியவற்றை பெற்றுள்ளது.

பயனர் அறிக்கையின்படி, Hero Super Splendor பைக் மைலேஜ் சராசரியாக 55 kmpl ஆகும். ARAI சோதனையின்படி லிட்டருக்கு 68 kmpl ஆகும்.

இரு பைக்குகளும் ஒரே மாதிரி என்ஜின் உட்பட அனைத்து வசதிகளும் பெற்றாலும், Xtech வேரியண்ட் எல்இடி ஹெட்லைட், டிஜிட்டல் கிளஸ்ட்டர், Xtech ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதிகளை பெற்றுள்ளது.

Exit mobile version