MERCEDES-BENZ
GOTTLIEB DAIMLER ஆட்டோமொபைல் குருவால் 1890 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிறுவனம் DMG (DAIMLER MOTOR CORPORATION).
1892 ஆம் ஆண்டு முதல் காரை விற்றது.சில ஆண்டுகளில் நோய்வாய்ப்பட்டு 1900 ஆம் ஆண்டு இறந்தார்.அவர் இறந்த பின் WILHELAM MAYBACH தொடர்ந்து இயக்கி வந்தார்.
1924 ஆம் ஆண்டு KARL BENZ (Father of AUTOMOBILE) நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொள்ள பட்டது.பின்பு 1926 ஆம் ஆண்டு DAIMLER-BENZ AG என்றானது.
MERCEDES
EMILL JELLINEK என்பவர் 1900 ஆம் ஆண்டு முதல் DAIMLER கார்களை விற்கும் டீலர் ஆக இருந்தார்.
DAIMLER கார்களுக்கு பெயர் தேவை பட அவருடைய மகளின் பெயரான MERCEDES JELLINEK என்பதை MERCEDES CAR என வைத்தார்.
KARL BENZ நிறுவனம் இணைந்த பின் MERCEDES-BENZ என்றானது. 125 ஆண்டுகள் கடந்து தனி பெருமையுடன் விளங்கும் நிறுவனம் இந்தியாவில் சொகுசு கார் விற்பனையில் சாதனை படைத்து வருகிறது
இதன் அடுத்த படி
BHARATBENZ
பாரத் பென்ஸ் என்ற பிராண்டில் இந்தியாவிற்காக டைமலர் ஏஜி உருவாக்கி உள்ளது. உலகின் முதல் நிலை நிறுவனமான டைமலர் ஏஜி தன்னுடைய சேவையை தொடங்கி உள்ளது.
டைமலர் ஏஜி நிறுவனம் சென்னை ஓரகடம் அருகில் DHCV (DAIMLER HERO COMMERCIAL VEHICLE) என்ற பெயரில் 2008 ஆம் ஆண்டு தொழிற்சாலை பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. ஹீரோ நிறுவனம் 40% சதவித பங்குகளை ஆரம்பத்தில் வைத்து இருந்தது. பின்பு நிலவிய பொருளாதார சரிவினால் 2009 ஆம் ஆண்டு ஹீரோ விலகியது.இதனால் DAIMLER AG 100% முதலீடு செய்து DICV (DAIMLER INDIAN COMMERCIAL VEHICLE) என நிறுவி உள்ளது.
400 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. 47 ஏக்கர் பரப்பளவில் 1.55km தூரம் சோதனை சாலை அமைந்து உள்ளது. 4400 கோடிமுதலீடு செய்து உள்ளது.
2012 வருட உற்பத்தி 36,000ஆக இருக்கும். 2013 ஆம் ஆண்டு முதல் 70,000 ஆக உற்பத்தி அதிகரிக்க படும்.