Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Font ResizerAa
Font ResizerAa
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Auto Expo 2023

டாடா H5X எஸ்யூவி கான்செப்ட் அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2018

By
MR.Durai
ByMR.Durai
நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.
Follow:
Last updated: 8,February 2018
Share
2 Min Read
SHARE

இளைய தலைமுறையினரை கவரும் வகையில் மிக நேர்த்தியான வடிவமைப்பை பெற்ற மாடல்களை அறிமுகப்படுத்தி வரும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம், அசத்தலான டாடா H5X எஸ்யூவி கான்செப்ட் மாடலை மோட்டார் ரசிகர்கள் விரும்பும் வகையில் மிக நேர்த்தியாக அறிமுகப்படுத்தி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியுள்ளது.

டாடா H5X எஸ்யூவி கான்செப்ட்

இந்தியாவின் முன்னணி மோட்டார் வாகன தயாரிப்பாளராக விளங்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்தை கையகப்படுத்திய பிறகுமிக சிறப்பான முறையில் டாடா கார்களை மேம்படுத்தி வருகின்றது.

இந்நிறுவனத்தின் டாடா இம்பேக்ட் டிசைன் 2.0 வடிவ மொழியை கொண்டு லேண்ட் ரோவர் எஸ்யூவி மாடலின் பிளாட்ஃபாரத்தை அடிப்படையில் டாடா ஹெச்5எக்ஸ் எஸ்யூவி உற்பத்தி நிலை மாடல் மிகவும் சவாலான விலையில் அடுத்த ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

முகப்பில் டாடா நிறுவனத்தின் பாரம்பரிய கிரிலுடன் கூடிய எல்இடி ஹெட்லைட் கொண்டு நேர்த்தியான பம்பர், பனி விளக்கு அறையில் நேர்த்தியான விளக்குகள் 22 அங்குல அலாய் வீல் பெற்று, பக்கவாட்டில் உயரமான வீல் ஆர்சு மற்றும் கிளாடிங் கொண்டிருக்கின்றது. பின்புறத்தில் மிக நேர்த்தியான பம்பரை பெற்றதாக வந்துள்ள இந்த மாடலில் ஸ்மோக்டு எல்இடி டெயில் விளக்குகள் இடம்பெற்றதாக வந்துள்ளது.

இன்டிரியர் அமைப்பில் ஐரோப்பியா கான்செப்ட் கார்களில் இடம்பெறுவதனை போன்ற குறைந்தபட்ச வளைவுகள், கோடுகளை கொண்ட கன்சோல் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்டூர்மென்ட் கிளஸ்ட்டரை பெற்றதாக வந்துள்ளது.4 இருக்கைகளை கொண்ட H5X கான்செப்ட் மாடலாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் உற்பத்தி நிலை மாடல் 5 இருக்கைகளை பெற்றிருக்கலாம்.

ஃபியட் நிறுவனத்தின் 2.0 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 140 ஹெச்பி பவர் மற்றும் 320 என்எம் டார்க் வெளிப்படுத்துவதுடன் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆகியவற்றை கொண்டதாக டாடா ஹெச்5எக்ஸ் சந்தைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் 2WD மற்றும் 4WD ஆகிய டிரைவ் மோட்களில் கிடைக்கப்பெறலாம்.

உற்பத்தி நிலை மாடல் அடுத்த ஆண்டின் மத்தியில் காட்சிக்கு வரலாம் என எதிர்பார்க்கபடுகின்ற நிலையில் அதனை தொடர்ந்து டாடா H5X கான்செப்ட் எஸ்யூவி விற்பனைக்கு வரவுள்ளது.

kia ev9
கியா EV9 எலெக்ட்ரிக் எஸ்யூவி கான்செப்ட் அறிமுகம் : ஆட்டோ எக்ஸ்போ 2023
ஆட்டோ எக்ஸ்போ 2023: கியா KA4 (கார்னிவல்) அறிமுகம்
550 கிமீ ரேஞ்சு.., மாருதி சுசூகி eVX EV எஸ்யூவி கான்செப்ட் அறிமுகம் : Auto Expo 2023
டாடா சஃபாரி, ஹாரியர் எலெக்ட்ரிக் எஸ்யூவி டீசர் வெளியீடு – Auto Expo 2023
புதிய 16 சீட்டர் டாடா மோட்டார்ஸ் விங்கர் வெளியானது – ஆட்டோ எக்ஸ்போ 2020
TAGGED:Tata H5X Tata Motors
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
vida vx2 electric scooter
Vida Electric
ஹீரோ விடா VX2 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை, ரேஞ்ச, நிறங்கள் மற்றும் சிறப்புகள்
2025 honda unicorn 160 onroad price
Honda Bikes
2025 ஹோண்டா யூனிகார்ன் 160 பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
ola s1 air
Ola Electric
ஓலா எஸ் 1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆன்-ரோடு விலை, ரேஞ்ச் மற்றும் சிறப்பம்சங்கள்
2025 ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350
Royal Enfield
2024 ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 பைக்கின் ஆன் ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள்

You Might Also Like

டாடாவின் எலெக்ட்ரிக் டிரக் அல்ட்ரா T7 EV அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2020

By MR.Durai
10,February 2020

ஆட்டோ எக்ஸ்போவில் டாடா வெளியிட்ட புதிய ப்ரிமா டிரக்குகள் அறிமுகம்

By MR.Durai
10,February 2020

ஆட்டோ எக்ஸ்போவில் ஹெய்மா 8 எஸ் எஸ்யூவி காட்சிக்கு வந்தது

By MR.Durai
9,February 2020

Haima 7X: ஹெய்மா 7எக்ஸ் எம்பிவி கார் வெளியானது – ஆட்டோ எக்ஸ்போ 2020

By MR.Durai
9,February 2020
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms
2025 Automobile Tamilan - All Rights Reserved