Automobile Tamilan Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Notification
Automobile Tamilan Automobile Tamilan
Search
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
Follow US
Bike News

2018 டுகாட்டி மான்ஸ்டர் 821 பைக் விற்பனைக்கு வெளியானது

By MR.Durai
Last updated: 3,May 2018
Share
SHARE

இந்தியாவில் ரூ.9.51 லட்சத்தில் டுகாட்டி மான்ஸ்டர் 821 பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட டுகாட்டி மான்ஸ்டர் 821 பாரத் ஸ்டேஜ் 4 எஞ்சினை பெற்றதாக வந்துள்ளது.

2018 டுகாட்டி மான்ஸ்டர் 821

25 ஆண்டுகால மான்ஸ்டர் வரிசை வரலாற்றில் 1993 ஆம் ஆண்டில் வெளியான மான்ஸ்டர் M900 மாடலின் தோற்ற உந்துதலில் வடிவமைக்கப்படுள்ள மான்ஸ்டர் 821 பைக் முந்தைய மாடலை விட 2 ஹெச்பி வரை ஆற்றல் குறைக்கப்பட்டுள்ளது.

புதிய பைக்கில் 111 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 821cc, 90- டிகிரி கோண வி ட்வீன் எஞ்சின் பொருத்தப்பட்டு, அதிகபட்சமாக 86 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது.

மிக சிறப்பான ஸ்டைலிங் அம்சத்தை பெற்று விளங்கும் மானஸ்டர் 821 மாடலில் டிஎஃப்டி இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர், பாதுகாப்பு சார்ந்த அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், டுகாட்டி பாதுகாப்பு பேக், மூன்று மாறுபாடுகளை பெற்ற போஸ் ஏபிஎஸ் பிரேக், டிராக்‌ஷன் கன்ட்ரோல் , அர்பன், டூரிங் மற்றும் ஸ்போர்ட் என மூன்று விதமான ரைடிங் மோடினை பெற்று விளங்குகின்றது.

2018 டுகாட்டி மான்ஸ்டர் 821 பைக் மைலேஜ் லிட்டருக்கு 18.1 கிமீ ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.

320 மிமீ டுயல் டிஸ்க் பிரெம்போ பிரேக் முன்புற டயரிலும், பின்புற டயரில் 245 மிமீ டிஸ்க் பிரேக்கினை பெற்று முன்புறத்தில் 43 மிமீ யூஎஸ்டி ஃபோர்க்குடன் , பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பரை கொண்டிருக்கின்றது.

டுகாட்டி மான்ஸ்டர் 821 பைக் , இந்திய சந்தையில் விற்பனையில் உள்ள ட்ரையம்ப் டிரிபிள் ஆர்எஸ், சுஸூகி GSX-S750, மற்றும் கவாஸாகி Z900 ஆகியவற்றை எதிர்கொள்ள உள்ளது. 2018 டுகாட்டி மான்ஸ்டர் 821 பைக் விலை ரூ. 9.51 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் இந்தியா)

tvs raider 125 deadpool
டெட்பூல் மற்றும் வால்வரின் டிசைனில் டிவிஎஸ் ரைடர் 125 வெளியானது
125சிசி பைக் சந்தையில் ஹோண்டா, ஹீரோ, பஜாஜ் மற்றும் டிவிஎஸ்
ஹீரோவின் கிளாமர் X பற்றி அறிய வேண்டிய 5 அம்சங்கள்
ஹீரோ கிளாமர் X பைக்கின் போட்டியாளர்கள் யார்.?
இந்தியாவின் குறைந்த விலை க்ரூஸ் கண்ட்ரோல் ஹீரோ கிளாமர் எக்ஸ் 125 சிறப்புகள்
TAGGED:DucatiDucati Monster 821
Share This Article
Facebook Whatsapp Whatsapp
Share
Follow US
16.8kFollowersLike
1kFollowersFollow
1kFollowersFollow
45.7kSubscribersSubscribe
10.9kFollowersFollow
2025 tvs jupiter ivory brown
TVS
2025 டிவிஎஸ் ஜூபிடர் 125 ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்
honda activa e electric scooter review
Honda Bikes
ஹோண்டா ஆக்டிவா e எலெக்ட்ரிக் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
2025 ஹோண்டா எஸ்பி 125
Honda Bikes
2025 ஹோண்டா SP125 பைக் விலை, மைலேஜ், மற்றும் சிறப்பம்சங்கள்
honda qc1 e scooters
Honda Bikes
ஹோண்டா QC1 எலெக்ட்ரிக் ஆன்-ரோடு விலை, மைலேஜ், நிறங்கள் மற்றும் சிறப்புகள்
Follow US
2025 Automobile Tamilan - All Rights Reserved
  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms