Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

பல மாதங்கள் காத்திருப்புக்கு பின்னர் பெனெல்லி 302R பைக் ஜூலை 25ந் தேதிவிற்பனைக்கு வரவுள்ளதை  டிஎஸ்கே பெனெல்லி அதிகார்வப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. மிக சிறப்பபான பெர்ஃபாமென்ஸ் வெளிப்படுத்தக்கடியதாக 302ஆர் விளங்கும். பெனெல்லி 302R பைக் வருகை இந்நிறுவனத்தின் டிஎன்டி 300 நேக்டு பைக்கினை அடிப்படையாக கொண்ட முழுதும் அலங்கரிகப்பட்ட மாடலான 302ஆர் பைக்கில் 38 ஹார்ஸ் பவர் , 27 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும் லிக்யூடு-கூல்டு 300சிசி பேரலல் ட்வீன் என்ஜின் பொருத்தப்பட்டு 6 வேக கியர்பாக்ஸ் வழியாக சக்கரங்களுக்கு ஆற்றலை எடுத்துச் செல்கின்றது. மிக நேர்த்தியாக இரு பிரிவு முகப்பு விளக்குகள் கொண்டு ஃபேரிங் செய்யப்பட்டுள்ள  302 ஆர் பைக்கின் எடை 196 kg ஆகும். இந்த பைக்கின் முன்புற டயரில் இரண்டு டிஸ்க் பிரேக் மற்றும் பின்புற டயரில் ஒரு டிஸ்க் பிரேக் ஆப்ஷனை பெற்றுள்ளது. சிறப்பான பயண அனுபவத்தினை வழங்கும் வகையில் முன்பக்கத்தில் அப்சைடு-டவுன் ஃபோர்க்குகள் ,…

Read More

இந்தியாவில் பிரசத்தி பெற்று விளங்குகின்ற மாடல்களில் ஒன்றான சுசுகி ஸ்விஃப்ட் ஹைபிரிட் ஆப்ஷனுடன் கூடிய எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல் ஜப்பான் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஸ்விஃப்ட் ஹைபிரிட் இந்த வருடத்தின் தொடக்க மாதங்களில் ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வெளியிடப்பட்டுள்ள புதிய தலைமுறை ஸ்விஃப்ட் காரில் கூடுதலாக ஹைபிரிட் ஆப்ஷன் பெற்ற மாடலாக விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. இந்த காரில் இடம்பெற்றுள்ள அதே பெட்ரோல் 1.2 லிட்டர் எஞ்சின் ஆப்ஷனுடன் கூடுதலாக 10 கிலோ வாட் திறனை வெளிப்படுத்தும் மின்சார மோட்டாரும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டின் ஒட்டுமொத்த ஆற்றல்  89 bhp வரை வெளிப்படுத்துகின்றது. இதில் சக்கரங்களுக்கு பவரை எடுத்துச் செல்ல 5 வேக ஏஎம்டி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. அதிக திறன் தேவைப்படாத நேரங்கள், குறைந்த வேகம் மற்றும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் பயணிக்கும்போது பெட்ரோல் எஞ்சின் அனைந்துவிட்டு மின்சார மோட்டாரில் மட்டுமே வாகனம் இயங்கும். வேகத்தை அதிகரிக்கும்போது தானாகவே மின்சார…

Read More

வருகின்ற தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக வெளியிப்பட உள்ள டாடா நெக்ஸான் எஸ்யூவி மாடலின் எஞ்சின் தொடர்பான முக்கிய விபரங்கள் வெளியாகியுள்ளது. டிகோர் மற்றும் டியாகோ வெற்றியை தொடர்ந்து நெக்ஸான் களமிறங்குகின்றது.  டாடா நெக்ஸான் எஸ்யூவி டாடா நிறுவனத்தின் முதல் காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடலாக வெளிவரவுள்ள நெக்ஸான் எஸ்யூவி மாடலில் புதிய ரெவோட்ரான் மற்றும் ரெவோடார்க் எஞ்சின்கள் பயன்படுத்தப்பட உள்ளது. நெக்ஸ்ட்-ஆன் அதாவது இதன் சுருக்கமே நெக்ஸான் என கடந்த 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் முதன்முறையாக காட்சிப்படுத்தப்பட்ட மாடல் மிக சிறப்பான செயல்திறன் மிக்க பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின்களை பெற்றிருப்பதுடன் பல்வேறு சிறப்பு அம்சங்களையும் கொண்டதாக இருக்கும்.  நெக்ஸான் எஞ்சின் டியாகோ மற்றும் டீகோர் போன்ற மாடல்களில் இடம்பெற்றிருந்த அதே ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சின் கூடுதல் பவர் மற்றும் டார்க் பெற்ற எஸ்யூவிக்கு ஏற்ற வகையில் 1.2 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 108bhp பவருடன் 170Nm டார்க்கினை…

Read More

ஊழல் என்றால் இந்தியா எனும் நிலைக்கு தள்ளப்பட்டு வரும் நமது நாட்டில் 59 சதவிகித இந்தியர்கள் டிரைவிங் டெஸ்ட் செய்யாமலே லைசென்ஸ் பெறுவதாக சேவ் லைஃப் அறக்கட்டளை ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது. டிரைவிங் டெஸ்ட் முக்கிய மெட்ரோ நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட சர்வே முடிவுகளின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள அறிக்கையில் இந்தியாவில் 59 சதவிகித  லைசென்ஸ் பெறுபவர்கள் முறையாக டிரைவிங் டெஸ்ட் தேர்வில் வெற்றி பெறாமலே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஆக்ரா நகரில் 12 சதவித லைசென்ஸ் பெறுபவர்கள் மட்டுமே நேர்மையான வழியில் பெறுவதாகவும். மற்ற 88 சதவிகித லைசெஸ்ன்ஸ் பெறுவோர் ஊழல் மூலம் பெறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்து ஜெய்ப்பூர் 74 சதவிகிதம், கவுஹாத்தி 64 சதவிகிதம் மற்றும் 54 சதவித டெல்லி மற்றும் மும்பை வாசிகள் முறையான தேர்ச்சி பெறாமலே லைசென்ஸ் பெறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள மொத்தம் 997 ஆர்டிஒ அலுவலகங்களில் வருடத்திற்கு 1.15 கோடி நபர்கள் புதிதாக அல்லது லைசென்ஸ்…

Read More

உலகின் மிகப்பெரிய வாகன சந்தைகளில் ஒன்றான நமது நாட்டின் மொத்த கார் மற்றும் எஸ்யூவி விற்பனையில் மாருதி சுசுகி முதலிடத்தில் உள்ளது. மாதந்திர விற்பன்னையில் ஜூன் 2017 -ல் டாப் 10 கார்கள் பற்றி அறியலாம். டாப் 10 கார்கள் – ஜூன் 2017 ஜிஎஸ்டிக்கு முந்தைய மாதமாக கருதப்படுகின்ற ஜூன் மாதத்தில் ஆல்ட்டோ கார் உள்ளிட்ட பெரும்பாலான மாடல்கள் சரிவையே சந்தித்துள்ளன. நாட்டின் முன்னணி மாருதி சுசுகி நிறுவனத்தின் 6 மாடல்கள் கைப்பற்றியுள்ளது. மாருதி ஆல்டோ முந்தைய மாதங்களை ஒப்பீடுகையில் சராசரியாக 20 ஆயிரம் கார்களை விற்பனை ஆகின்ற ஆல்டோ விற்பனை 14 ஆயிரத்து 856 என மிகவும் கடுமையாகவே பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் நாட்டின் முதன்மையான காராக தொடர்ந்து விளங்குகின்றது. ஹூண்டாய் கிராண்ட ஐ10 நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தயாரிப்பாளரான ஹூண்டாய் நிறுவனத்தின் கிராண்ட் ஐ10 இரண்டாவது இடத்தை எட்டிப்பிடித்துள்ள நிலையில் அதன் விற்பனை எண்ணக்கையில் பெரிய மாற்றங்கள் இல்லாமல் தொடர்ந்து…

Read More

உலகின் மொத்த ஆட்டோமொபைல் சந்தையில் டொயோட்டா நிறுவனத்துக்கு தனியான பாரம்பரியம் என்றால் அதன் தரம், உலகில் 49 நாடுகளில் டொயோட்டா கார் அதிகம் விற்பனை செய்யப்படுகின்ற மாடலாக விளங்குகின்றது. டொயோட்டா மோட்டார் இதுகுறித்து ஆய்வறிக்கை ஒன்றை இங்கிலாந்தின் regtransfers இணையதளம் வெளய்யிட்டுள்ளது. மிகவும் தரமான மற்றும் கட்டுறுதிமிக்க கார்களை வடிவமைப்பத்தில் பிரசத்தி பெற்று விளங்கும் டொயோட்டா நிறுவனம் ஜப்பான்,ஆஸ்திரேலியா, அரபு அமீரகம், சிங்கப்பூர், பாகிஸ்தான்,இந்தோனேசியா, உள்ளிட்ட மொத்தம் 49 நாடுகளில் முதலிடத்தில் உள்ளது. அதனை தொடர்ந்து ஃபோக்ஸ்வேகன் குழுமம் 14 நாடுகளில் முன்னிலையில் உள்ளது. குறிப்பாக ஜெர்மனி, நார்வே பெல்ஜியம் போன்ற நாடுகளாகும். மூன்றாவது இடத்தில் ஃபோர்டு, அதனை தொடர்ந்து ரெனால்ட்,ஸ்கோடா, டைக்கா மற்றும் ஃபியட் போன்ற யாடுகளும் உள்ளன. இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் சுசுகி நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. மேலும் முழுமையான நாடுகள் வாரியான விபரத்துக்கு படத்தை காணலாம்.

Read More