Author: MR.Durai

நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.

ஹூண்டாய் நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற எஸ்யூவி மாடலான ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி மாடலில் கூடுதல் வசதிகள் மற்றும் இரட்டை வண்ண கலவை தோற்றத்தை பெற்ற மாடல்கள் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. க்ரெட்டா எஸ்யுவி 2015ல் இந்திய சந்தையில் க்ரெட்டா எஸ்யுவி மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. டாப் SX+ வேரியன்டில் 7 இஞ்ச் அகலம் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சேர்க்கப்பட்டுள்ளது. புதிய E+ வேரியன்ட் 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் மாடலில் கிடைக்கும். க்ரெட்டா எஸ்யூவி மாடலில் இடம்பெற்றுள்ள எஞ்சின் விபரம்…, 120 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தபட்டுள்ளது. இதன் டார்க் 155என்எம் ஆகும். இதன் மைலேஜ் லிட்டருக்கு 15.29கிமீ ஆகும். 87 பிஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.இதன் டார்க் 220என்எம் ஆகும். இதன் மைலேஜ் லிட்டருக்கு 21.38கிமீ ஆகும். 125 பிஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.6 லிட்டர் என்ஜின் பயன்படுத்தியுள்ளனர். இதன் டார்க் 259என்எம் ஆகும்…

Read More

கடந்த 2016-2017 ஆம் நிதி ஆண்டின் இறுதி மார்ச் மாத விற்பனை முடிவில் முதல் 10 இடங்கள் பிடிக்க கார்களில் மாருதி பலேனோ கார் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. பிரபலமான டிசையர் மற்றும் ஸ்விஃப்ட் கார்களை பின்னுக்கு தள்ளியுள்ளது. விற்பனையில் 10 கார்கள் மார்ச் 2017 பலேனோ காரின் விற்பனை 163.40 சதவீத கூடுதல் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் கார்கள் பட்டியலில் பின் தங்கியுள்ளது. க்விட் கார் முதல் 10 இடங்களில் 8வது இடத்தை பெற்றுள்ளது. சுசுகி நிறுவனத்தின் குஜராத் ஆலை செயல்பட தொடங்கியதால் பலேனோ கார்களின் டெலிவரி சூடுபிடிக்க தொடங்கியுள்ளதால் கடந்த மார்ச் 2017ல் 16426 கார்கள் டெலிவரி கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 2016ல் விற்பனை செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கை 6,236 மட்டுமே இதனுடன் ஒப்பீடு செய்தால் 163.40 சதவீத கூடுதல் வளர்ச்சியை மாதந்திர விற்பனை முடிவில் பெலினோ பதிவு செய்துள்ளது. 80 ஆயிரத்துக்கு மேற்பட்ட கார்கள் முன்பதிவு செய்யப்பட்டு…

Read More

2015 ம் வருடத்தில் இந்திய சாலைகளில் 1.46 லட்சம் நபர்கள் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளதாக சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை  இனை அமைச்சர் மன்சுக் மாண்டாவியா பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். சாலை விபத்துகள் 2015ம் ஆண்டில் இந்திய சாலைகளில் 1,46,133 நபர்கள் உயிரிழந்துள்ளனர். தேசிய நெடுஞ்சாலைகளில் 51,204 நபர்களும் மாநில நெடுஞ்சாலையில் 40,863 நபர்களும் உயிரிழந்துள்ளனர். 2014 ஆம் ஆண்டில் உயிரிழந்தவர் எண்ணிக்கை 1,39,671 ஆகும். கடந்த ஏப்ரல் 3ந் தேதி பாராளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை இனை அமைச்சர் மன்சுக் மாண்டாவியா கடந்த 2015 ம் ஆண்டில் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ,எக்ஸ்பிரெஸ் வே மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் உள்பட நாட்டில் மொத்தம் 1,46,133 நபர்கள் சாலை விபத்துகளால் பலியாகியுள்ளனர் என தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் கடந்த 2014ம் ஆண்டில் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 1,39,671 ஆகும் , இதனை விட கூடுதலாகவே 2015ல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தேசிய நெடுஞ்சாலைகள் , எக்ஸ்பிரெஸ் வே…

Read More

உச்சநீதிமன்ற அதிரடி தீர்ப்பை தொடர்ந்து மார்ச் மாத இறுதி தினங்களில் பரபரப்பாக இயங்கி ஆட்டோமொபைல் சந்தையில் மஹிந்திரா நிறுவனத்தின் 18 ஆயிரம் பி எஸ் 3 வாகனங்கள் விற்பனை செய்யப்படாமல் உள்ளதாக பங்கு சந்தையில் மஹிந்திரா தெரிவித்துள்ளது. மஹிந்திரா பி எஸ் 3 வாகனங்கள் ஏப்ரல் 1 முதல் பி எஸ் 3 வாகனங்களை விற்பனை செய்ய உச்சநீதி மன்றம் தடைவிதித்துள்ளது. மஹிந்திரா நிறுவனம் 18,000 பி.எஸ்3 வாகனங்களை இருப்பில் வைத்துள்ளது. இவற்றில் இருசக்கர வாகனம் முதல் கனரக வர்த்தக வாகனங்கள் வரை அடங்கும். ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சம்மேளனம் (சியாம்) உச்சநீதிமன்றத்தில் அளித்திருந்த அறிக்கையின்படி 6.71 லட்சம் இருசக்கர வாகனங்கள், 16,000 கார்கள், 40,000 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 96,000 வர்த்தக வாகனங்கள் என சுமார் 8.24 லட்சம் வாகனங்கள் பிஎஸ் 3 மாசு கட்டுப்பாடு என்ஜின் பொருத்தப்பட்டுள்ள நிலையில் விற்பனை செய்யப்படாமல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மார்ச் 30 மற்றும் 31ந்…

Read More

ரூ.13.41 லட்சம் ஆரம்ப விலையில் மஹிந்திரா ஸ்கார்பியோ  அட்வென்ச்சர் எடிசன் எஸ்யூவி மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரையறுக்கப்பட்ட பதிப்பாக  கூடுதல் வசதிகளை பெற்ற மாடல் கிடைக்கும். மஹிந்திரா ஸ்கார்பியோ 4×2 மற்றும்  4×4 என இரு டிரைவ் ஆப்ஷன்களிலும் ஸ்கார்பியோ அட்வென்ச்சர் எடிசன் கிடைக்க உள்ளது. எஞ்சின் ஆற்றல் மற்றும் டார்க் போன்றவற்றில் எந்த மாற்றங்களும் இல்லை. கூடுதல் வசதிகள் மற்றும் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை பெற்றுள்ளது. அட்வென்ச்சர் பதிப்பில் கன் மெட்டல் அலாய் வீல், ORVM சைடு இன்டிகேட்டர், சில்வர் மற்றும் வெள்ளை வண்ணத்திலான கலைவையை பெற்ற அட்வென்ச்சர் எடிசன் சிறப்பு பாடி கிராபிக்ஸ் உள்பட டெயில் விளக்கில் ஸ்மோக்ட் அம்சம் போன்றவற்றை பெற்றுள்ளது. அட்வென்ச்சர் பதிப்பின் இன்டிரியரில் கருப்பு மற்றும் நீலம் வண்ணத்திலான ஃபேபரிக் இருக்கைள், லெதர் உறை சுற்றப்பட்ட ஸ்டீயரியங் வீல் , கியர் லிவர் ஆர்ம்ரெஸ்ட் , டேஸ்போர்டு போன்றவற்றில் அட்வென்ச்சர் பேட்ஜ் எடிசன் பதிக்கப்பட்டுள்ளது. மேலும் 6-inch…

Read More

2018 ஆம் ஆண்டு நடைபெற உள்ள டெல்லி ஆட்டோ எக்ஸ்போ வாயிலாக ஹூண்டாய் ஐயோனிக் பிளக்-இன் ஹைபிரிட் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஐயோனிக் ஹைபிரிட் கார் சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படுத்தாத ஜீரோ எமிஷன் மாடலாகும். ஹூண்டாய் ஐயோனிக் 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் இந்திய சந்தைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஹூண்டாய் ஐயோனிக் மூன்று விதமான ஹைபிரிட் ஆப்ஷனில் சர்வதேச அளவில் கிடைக்கின்றது. ஹைபிரிட் , பிளக் இன் ஹைபிரிட் மற்றும் எலக்ட்ரிக் என மூன்று விதமான வேரியண்டில் ஐயோனிக் கார் விற்பனைக்கு சர்வதேச அளவில் பல நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டீசல் கார்களுக்கு தடை மற்றும் ஃபேம் (FAME – Faster Adoption and Manufacturing Electric and hybrid vehicles) திட்டத்தின் கீழ் சலுகையை பெற்று சவாலான விலையில் விற்பனை செய்ய ஏற்ற காராக விளங்க உள்ள ஐயோனிக் இந்திய சந்தைக்கு…

Read More