வருகின்ற ஏப்ரல் 12 ,2017ல் இந்திய சந்தையில் ஃபியட் கிறைஸரின் ஜீப் காம்பாஸ் எஸ்யூவி மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷனில் காம்பாஸ் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஜீப் காம்பாஸ் எஸ்யூவி ஏப்ரல் 12ந் தேதி இந்தியாவில் ஜீப் காம்பாஸ் மாடல் அதிகார்வப்பூர்வமாக வெளியிடப்பட உள்ளது. பியட் நிறுவனத்தின் ராஞ்சாகாவுன் ஆலையில் ஜீப் காம்பாஸ் தயாரிக்கப்பட உள்ளது. ரூ.19 லட்சத்தில் காம்பாஸ் எஸ்யூவி காரின் ஆரம்ப விலை தொடங்கலாம். சர்வதேச அளவில் பல நாடுகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய காம்பாஸ் மாடலையே அடிப்படையாக கொண்ட இந்த மாடல் இந்திய சந்தையில் ஜீப் பிராண்டின் மதிப்பை பெருமளவில் உயர்த்த வாய்ப்புள்ளது. இந்திய சந்தைக்கான என்ஜின் விபரங்கள் குறித்து எவ்விதமான அதிகார்வப்பூர்வ தகவலும் வெளியாக நிலையில் இந்த எஸ்யூவி காரில் 170 ஹெச்பி ஆற்றலுடன் 350 என்எம் டார்க்கினை வெளிப்படுத்தும் மல்டிஜெட் டீசல் என்ஜின் மற்றும் 140 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.4…
Author: MR.Durai
மேம்படுத்தப்பட்ட 2017 ஹோண்டா ஏவியேட்டர் ஸ்கூட்டர் மாடல் ரூ.61,113 ஆரம்ப விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிஎஸ் 4 எஞ்சினுடன் ஏஹெச்ஒ ஆப்ஷனை பெற்றதாக ஏவியேட்டர் வந்துள்ளது. 2017 ஹோண்டா ஏவியேட்டர் பாரத் ஸ்டேஜ் 4 நடைமுறை ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகின்றது. ஒளி குறைவான இடங்களில் தானாகவே ஒளிரும் முகப்பு விளக்கினை ஏவியேட்டர் பெற்றுள்ளது. டிரம் மற்றும் டிஸ்க் பிரேக் ஆப்ஷன்களில் கிடைக்கின்றது. பி.எஸ் 4 தர 109.19CC கொண்ட ஒற்றை சிலிண்டர் அதிகபட்சமாக 8 ஹெச்பி பவருடன் , 8.94 டார்க்கினை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள எஞ்சினில் சிறப்பான மைலேஜ் தரும் நோக்கில் ஹோண்டா நிறுவனத்தின் காப்புரிமை பெற பெற்ற ஹோண்டா ஈக்கோ நுட்பத்தினை பெற்றதாக வந்துள்ள ஏவியேட்டரில் சக்கரங்களுக்கு ஆற்றலை எடுத்துச் செல்ல சிவிடி ஆட்டோ கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. ஆக்டிவா ஸ்கூட்டரின் அதே என்ஜினை ஏவியேட்டர் பெற்றிருந்தாலும் கூடுதலான நீளம் மற்றும் உயரத்தை பெற்றிருப்பதுடன் முன்பக்க டிஸ்க்…
கடந்த 2016-ம் ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் முதன்முறையாக இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவி காரின் உற்பத்தி இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது. டிகுவான் எஸ்யூவி மஹாராஷ்ட்டிரா மாநிலத்தில் அமைந்துள்ள அவுரங்காபாத் ஃபோக்ஸ்வேகன் இந்தியா ஆலையில் டிகுவான் எஸ்யூவி உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. 147 பிஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் TDI டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். மே மாதம் டீகுவான் கார் விற்பனைக்கு ரூ. 29 லட்சத்தில் அறிமுகம் செய்யப்படலாம். சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்ற ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவி மாடல் ஐரோப்பா என்சிஏபி கிராஸ் டெஸ்ட் சோதனையில் 5 நட்சத்திர தர மதிப்பீட்டை பெற்றுள்ளது. 2.0 லிட்டர் TDI டீசல் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 147 பிஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்துவதுடன் 340 என்எம் டார்க்கினை வழங்குகின்றது. ஆற்றலை சக்கரங்களுக்கு எடுத்துச் செல்ல 7 வேக டிஎஸ்ஜி ஆட்டோ கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் MQB பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்ட முதல்…
இந்தியர்களின் மனதில் என்றும் நீங்காத இடம்பிடித்த யமஹா RX100 பைக்கினை மிக நேர்த்தியாக கஸ்டமைஸ் செய்து பல சுவாரஸ்யமான முறையில் தோற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் அசத்தியுள்ளனர். யமஹா RX100 21 ஆண்டுகள் இந்திய சந்தையில் தயாரிக்கப்பட்ட மாடலாக ஆர்எக்ஸ்100 விளங்குகின்றது. 1985 ஆம் ஆண்டு உற்பத்தி தொடங்கப்பட்டு 1996 ஆம் ஆண்டு வரை உற்பத்தி செய்யப்பட்டது. தனக்கென தனியான இடத்தை இளைஞர்கள் மனதில் பெற்ற மாடலாக இன்றளவும் வலம் வந்து கொண்டிருக்கின்றது. 2 ஸ்ட்ரோக்குகளை கொண்ட 98 சிசி ஒற்றை சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகப்சமாக 11 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்துவதுடன் 10.39 என்எம் டார்க்கினை வெளிப்படுத்துகின்றது. உடனடி பிக்கப் என்றால் இன்றும் நினைவுக்கு வருகின்ற யமஹா ஆர்எக்ஸ் 100 பைக்கினை மிக நேர்த்தியான கஸ்டம் கிட் பாடிகளுடன் அசத்தாலாக மாற்றியுள்ளனர். யமஹா ஆர்எக்ஸ்100 வதந்தி தெரியுமா ? ஆர்எக்ஸ் 100 பைக் நிறுத்தப்பட்டதற்கு இன்றளவும் பலரிடம் ஒரு வதந்தியான தகவலே உள்ளது,…
இந்திய சுசுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் 2017 சுசூகி லெட்ஸ் மற்றும் ஹயாத் EP பைக் மாடல்களை பிஎஸ் 4 எஞ்சினுடன் அறிமுகம் செய்துள்ளது. வேறு எந்த மாற்றங்களும் இடம்பெறவில்லை. 2017 சுசூகி லெட்ஸ் வருகின்ற ஏப்ரல் 1 முதல் பாரத் ஸ்டேஜ் 4 மாசு விதி அமலுக்கு வருகின்றது. ஜிக்ஸர் ,ஆக்செஸ் மாடல்களை தொடர்ந்து லெட்ஸ் மற்றும் ஹயத் மாடலிலும் பிஎஸ் 4 எஞ்சின் சேர்க்கப்பட்டுள்ளது. அனைத்து தயாரிப்பாளர்களும் தங்களுடைய மாடல்களை பிஎஸ் 4க்கு மாற்றி வருகின்றனர் புதிய சுசுகி ஹயாத் EP பைக் பைக்கில் ஒற்றை சிலிண்டர் கொண்ட 112.8சிசி 4 ஸ்ட்ரோக் பிஎஸ்-4 எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 8 பிஹச்பி ஆற்றலை வெளிப்படுத்துவதுடன், 9.3 என்எம் டார்க்கையும் வழங்குகின்றது. புதிய சுசுகி லெட்ஸ் ஸ்கூட்டர் மாடலில் 112சிசி பிஎஸ்-4 எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 8.4 பிஹச்பி ஆற்றலுடன் 8.8 என்எம் டார்க்கையும் வழங்குகின்றது. விலை விபரம் புதிய சுசூகி லெட்ஸ் ஆரம்ப விலை…
ரூ.8.38 லட்சம் ஆரம்ப விலையில் 2017 ஃபோர்ஸ் கூர்கா எஸ்யூவி கார் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. எக்ஸ்பீடியேசன் மற்றும் எக்ஸ்புளோரர் என இரு வேரியன்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஃபோர்ஸ் கூர்கா பாரத் ஸ்டேஜ் 4 மாசுகட்டுப்பாடு விதிகளுக்கு ஏற்ற என்ஜினை கூர்கா எஸ்யூவி பெற்றுள்ளது மேம்படுத்தப்பட்ட புதிய சஸ்பென்ஷன், அடிச்சட்டம் மற்றும் கியர்பாக்ஸை பெற்றுள்ளது. ஆல்வீல் டிரைவ் மற்றும் ரியர்வீல் டிரைவ் ஆப்ஷனில் கிடைக்கின்றது. மூன்று மற்றும் 5 கதவுகளை பெற்ற ஆப்ஷனில் கிடைக்கின்றது. 86hp ஆற்றலை வெளிப்படுத்தும் 2.6 லிட்டர் பிஎஸ் 4 தர மாசு கட்டுப்பாடு விதிகளுக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ள இந்த என்ஜினில் ஆற்றலை எடுத்து செல்ல 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் இடம்பிடித்துள்ளது. பின்பக்க வீல் டிரைவ் கொண்ட மாடலாக எக்ஸ்பீடியேசன் மற்றும் ஆல்வீல் டிரைவ் ஆப்ஷனை எக்ஸ்புளோரர் வேரியன்டும் பெற்றுள்ள நிலையில் முந்தைய மாடலை விட சில குறிப்பிடதக்க வகையிலான முன் மற்றும் பின் பம்பர்…