2013 கேடிஎம் ட்யூக் 390 பைக் வருகைக்கு பின்னர் முற்றிலும் மேம்படுத்தப்பட்ட 2017 கேடிஎம் ட்யூக் 390 பைக் ரூ. 2.25 லட்சம் விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு சிறப்பு அம்சங்களை பெற்றுள்ள 390 ட்யூக் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய 10 விஷயங்கள் என்ன என பார்க்கலாம். கேடிஎம் ட்யூக் 390 பைக் விற்பனையிலிருந்த மாடலை விட முற்றிலும் மேம்பட்ட பல்வேறு விதமான நவீன வசதிகளை கொண்டதாக விளங்குகின்ற புதிய ட்யூக் 390 பைக்கில் 44bhp (34KW) பவரை வெளிப்படுத்தும் 373சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 35 NM வெளிப்படுத்தும். இதில் சிலிப்பர் கிளட்ச் வசதியுடன் இணைந்த 6 வேக கியர்பாக்ஸ் இடம்பிடித்துள்ளது. 1290 சூப்பர் ட்யூக் பைக்கின் வடிவத்தை சார்ந்த அம்சங்களை பெற்றதாக வந்துள்ள 390 ட்யூக் பைக்கின் டிசைன் ஆக்ரோஷமாக இரட்டை பிரிவுகொண்ட முன்பக்க முழு எல்இடி விளக்குகளின் வாயிலாக வெளிப்படுத்துகின்றது. முந்தைய மாடலை விட சுமார் 2.4…
Author: MR.Durai
இந்தியாவின் பிரிமியம் மோட்டார் சைக்கிள் சந்தையின் விற்பனை எண்ணிக்கை அபரிதமான வளர்ச்சியை எட்டி வரும் நிலையில் கேடிஎம் பைக் நிறுவனம் இந்தியாவில் 1 லட்சம் பைக்குகளை விற்பனையை கடந்த புதிய சாதனையை படைத்துள்ளது. கேடிஎம் பைக் சர்வதேச அரங்கில் கேடிஎம் பைக் நிறுவனம் 2016 ஆம் ஆண்டில் 2 லட்சத்துக்கு மேற்பட்ட பைக்குகளை விற்பனை செய்து 1.14 பில்லியன் யூரோ மதிப்பிலான வருமானத்தை ஈட்டியுள்ளது. கேடிஎம் நிறுவனத்தின் முக்கிய பங்குதார்களில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் முதன்மையானதாகும். இந்தியாவின் விற்பனை விபரத்தை காட்டும் இந்த வரை படத்தை கவனியுங்கள்.. கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் தொகுக்கப்பட்டுள்ள இந்த விவரக்குறிப்பில் சராரியாக வருடத்திற்கு 50 சதவீத வளர்ச்சியை கேடிஎம் பதிவு செய்து வருகின்றது. நடப்பு நிதி ஆண்டில் இதுவரை 37,000 பைக்குகளை விற்பனை செய்துள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவின் பிரிமியம் சந்தையில் 80 சதவீத பங்களிப்பினை பஜாஜ் கேடிஎம் பெற்றுள்ளதை விளக்கும் விவர படமும்…
மினி எஸ்யூவி காரினை போன்ற தோற்ற அமைப்புடன் எண்ணற்ற ரசிகர்களை பெற்ற ரெனோ க்விட் 1.0 இன்ஜின் மாடலில் கூடுதலாக RXL வேரியன்டை விற்பனைக்கு ரெனால்ட் வெளியிட்டுள்ளது. இதில் மேனுவல் மற்றும் ஏஎம்டி மாடலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரெனோ க்விட் 1.0 சமீபத்தில் ரெனோ க்விட் கார் புதிய விற்பனை சாதனையை படைத்துள்ளது. அதாவது கடந்த 2015 ஆம் ஆண்டு விற்பனைக்கு வந்த க்விட் கார் 1.30 லட்சம் என்கின்ற விற்பனை எண்ணிக்கையை கடந்துள்ளது. முதன்முறையாக 0.8லி மாடலிலும் அதனை தொடர்ந்து 1.0லி மாடலில் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்சிலும் அறிமுகம் செய்யப்பட்டது. 0.8லி இன்ஜின் ஆப்ஷனில் உள்ள RXL வேரியன்டை அடிப்படையாக கொண்ட மாடலை 1.0லி இன்ஜின் பொருத்தி விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த வேரியன்டில் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. RXL வேரியன்ட் விபரம் பாடி வண்ணத்தில் பம்பர் ஆடியோ வசதிகள் எலக்ட்ரிக் பவர்…
வருகின்ற மார்ச் 3ந் தேதி விற்பனைக்கு வரவுள்ள மாருதி பலேனோ ஆர்எஸ் காரின் டீஸர் வீடியோ ஒன்றினை மாருதி சுசூகி வெளியிட்டுள்ளது. பிப்ரவரி 27ந் தேதி முதல் பலேனோஆர்எஸ் காருக்கு ரூ.11,000 செலுத்தி முன்பதிவு செய்துகொள்ளலாம். மாருதி பலேனோ ஆர்எஸ் விற்பனையில் உள்ள சாதரன மாடலை விட கூடுதலான சக்தியை வெளிப்படுத்தக்கூடிய ஆர்எஸ் காரில் 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பூஸ்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டிருக்கும். இதன் அதிகபட்ச பவர் 100 ஹெச்பி மற்றும் டார்க் 150 என்எம் ஆக இருக்கும். இதில் பவரை சக்கரங்களுக்கு எடுத்து செல்வதற்கு 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டிருக்கும். சாதரன மாடலை விட தோற்ற அமைப்பில் முகப்பில் சிறிய அளவிலான பம்பர் முன்பக்க கிரில் , பின்பக்க பம்பர் போன்றவற்றில் கருப்பு நிறத்தை சார்ந்த நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பக்கவாட்டில் எந்த மாற்றங்களும் இல்லாமல் கருப்பு பூச்சூ கொண்ட புதிய வடிவத்தினை பெற்ற அலாய்…
2017 ஆம் ஆண்டில் இந்திய சந்தையில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவி மற்றும் ஃபோக்ஸ்வேகன் பஸாத் செடான் காரையும் விரைவில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவி 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் முதன்முறையாக இந்திய சந்தைக்கு பார்வைக்கு அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள டிகுவான் எஸ்யூவி பிரிமியம் ரக பிரிவில் வரவுள்ளது. MQB பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள டிகுவான் எஸ்யூவி காரில் 177 bhp பவர் , 350 என்எம் டார்க் வெளிப்படுத்தும 2.0 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதில் 7 வேக டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும். பாகங்களை தருவித்து ஒருங்கினைத்து விற்பனைக்கு வரலாம். முந்தைய தலைமுறை டிகுவான் காரை விட பன்மடங்கு தரம் , பாதுகாப்பு , தோற்றம் போன்றவற்றில் உயர்வு பெற்று விளங்குகின்றது. சான்டா ஃபீ , எண்டேவர் ,ஃபார்ச்சூனர் , பஜெரோ ஸ்போர்ட் போன்ற மாடல்களுக்கு…
புதிய 2017 கேடிஎம் டியூக் 200 பைக் ரூ.1.43 லட்சம் விலையில் இந்தியாவில் இன்று விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. ட்யூக் 200 பைக்கில் பல்வேறு தோற்ற மாற்றங்கள் மற்றும் வசதிகளை பெற்றதாக வந்துள்ளது. கேடிஎம் டியூக் 200 கேடிஎம் 390 ட்யூக் பைக் போன்று பெரிய அளவிலான வசதிகளை பெறாமலே வந்துள்ள புதிய கேடிஎம் டியூக் 200 பைக்கில் ஹாலஜென் முகப்பு விளக்குடன் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பகல் நேர ரன்னிங் எல்இடி விளக்குகளை பெற்றுள்ளது. முந்தைய இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் மற்றும் வசதிகளில் மாற்றம் இல்லை. யூரோ 4 மாசு விதிமுறைகளுக்கு ஏற்ற 24bhp பவரை வெளிப்படுத்தும் 373சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 19.2 NM வெளிப்படுத்தும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. முந்தைய மாடலில் இருந்த எந்த மாற்றங்களும் பெறாமலே விற்பனைக்கு வந்துள்ளது. முன்பக்க டயரில் 300மிமீ பிரேக் மற்றும் பின்பக்க டயரில் 230 மிமீ பிரேக் இடம்பெற்றுள்ளது. 2017 கேடிஎம்…