அடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு வரவுள்ள டாடா மோட்டார்சின் டியாகோ ஏஎம்டி காரின் முக்கிய விபரங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. பெட்ரோல் மாடலில் இரு வேரியன்ட்களை டியாகோ பெற்றிருக்கும் என தெரிகின்றது. டியோகா ஏஎம்டி பெட்ரோல் மற்றும் டீசல் என இருஎஞ்சின் ஆப்ஷன்களிலும் ஏஎம்டி கியர்பாக்ஸ் எதிர்பார்த்த நிலையில் இணையத்தில் பெட்ரோல் மாடலின் வேரியன்ட் விபரங்கள் மட்டுமே கசிந்துள்ளது. டீசல் மாடலில் தாமதமாகவோ அல்லது இதனுடனே டியாகோ டீசல் ஏஎம்டி காரும் விற்பனைக்கு வரலாம். டாடாவின் ஸெஸ்ட் , நானோ கார்களை தொடர்ந்து மூன்றாவது ஏஎம்டி பொருத்தப்பட்ட மாடலாக டியோகோ வரவுள்ளது. 1.2 லிட்டர் ரெவோட்ரான் எஞ்சின் வாயிலாக 84 பிஎச்பி பவருடன், 114 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் ஒரு லிட்டருக்கு 23.84 கிமீ மைலேஜ் தரவல்லதாக உள்ள நிலையில் புதிதாக வரவுள்ள 5 வேக ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் மைலேஜ் கூடுதலாக இருக்கும்.…
Author: MR.Durai
மேம்படுத்தப்பட்ட புதிய ஹோண்டா ஷைன் எஸ்பி பைக் மாடல் ரூ.70,926 சென்னை ஆன்ரோடு விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. பிஎஸ் 4 எஞ்சின் , ஏஹெச்ஓ , ஹெச்இடி டயர் போன்ற அம்சங்களை 2017 ஹோண்டா சிபி ஷைன் எஸ்பி பெற்றுள்ளது. ஹோண்டா ஷைன் எஸ்பி புதிய ஹோண்டா ஷைன் எஸ்பி தோற்ற அமைப்பில் வேறு எவ்விதமான மாற்றங்களையும் பெறாமல் சில கூடுதலான பாடி கிராபிக்ஸ் , தானியங்கி முறையில் ஒளிரும் முகப்பு விளக்கு , ஹெச்இடி டயர் போன்றவற்றுடன் புதிதாக நீலம் மற்றும் சிவப்பு வண்ணம் சேர்க்கப்பட்டுள்ளது. 10.16 பிஹெச்பி பவரையும் ,10.30 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் 125சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ள ஷைன் SP பைக்கில் பவரை சக்கரங்களுக்கு எடுத்து செல்ல 5 வேக கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. சாதரன சிபி ஷைன் மாடலுக்கு மேலாக நிலைநிறுத்தப்பட்டுள்ள எஸ்பி பைக்கில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ள முக்கிய அம்சமான HET டயர் வாயிலாக சிறப்பான எரிபொருள் சிக்கனத்தை வழங்க உதவும்…
2017 ஜெனிவா மோட்டார் ஷோ அரங்கில் அறிமுகம் செய்யப்பட உள்ள ரேஞ்ச் ரோவர் வேலர் எஸ்யூவி காரின் படத்தை முதன்முறையாக லேண்ட் ரோவர் வெளியிட்டுள்ளது. எவோக் மற்றும் எவோக் ஸ்போர்ட் மாடலுக்கு இடையில் வேல்ர் எஸ்யூவி (Velar) நிலைநிறுத்தப்பட உள்ளது. ரேஞ்ச் ரோவர் வேலர் எஸ்யூவி விற்பனையில் உள்ள ரோஞ்ச் ரோவர் கார்களின் அடிப்படையான வடிவதாத்பரியங்களை பெற்ற மாடலாகவே காட்சியளிக்கின்ற இந்த புதிய எஸ்யூவி மாடலில் மிக சிறப்பான ஆஃப்ரோடு அனுபவத்தினை வழங்கவல்ல அம்சங்களை பெற்றதாக விளங்கும் என குறிப்படப்பட்டுள்ளது. ஸ்போர்ட்டிவ் தன்மையை வெளிப்படுத்தக்கூடிய பல்வேறு கூடுதல் புராஃபைல் கோடுகளை பெற்றதாக வெளிப்படுத்தப்பட்டுள்ள படத்தில் மிக நேர்த்தியான சன்ரூஃப் அமைந்துள்ளது. இன்டிரியர் அமைப்பின் படங்கள் வெளியிடப்படவில்லை என்றாலும் வெளியாகியுள்ள படத்தின் வாயிலாக மிக 12 அங்குல இன்ஃபோடெயின்ட்மென்ட் தொடுதிரை சிஸ்டத்தில் லேண்ட் ரோவர் இன்டச் கன்ட்ரோல் புரோ சிஸ்டம் அமைந்திருக்கும் , 12 அங்குல இன்ஸ்டூர்மென்ட் டிஜிட்டல் கிளஸ்ட்டர் போன்றவை கொண்டிருக்கலாம். வேலர்…
டாடா மோட்டார்சின் டிரக் ரேசிங் போட்டியின் 4வது வருட T1 பிரைமா டிரக் பந்தயம் மார்ச் 19ந் தேதி புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் நடைபெற உள்ளது. இந்தியாவில் நடைபெறுகின்ற பிரத்யேக டிரக் ரேசாக டி1 பிரைமா பந்தயம் விளங்குகின்றது. T1 பிரைமா டிரக் கிரேட்டர் நொய்டாவில் அமைந்துள்ள புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் நடைபெறுகின்ற இந்த 4வது சீசனை FIA (பெடரேஷன் இன்டர்னேஷனல் de l ‘ஆட்டோமொபைல்) மற்றும் இந்திய மோட்டார் விளையாட்டு கிளப் (FMSCI) இணைந்து டாடா டி1 பிரைமா டிரக் பந்தயத்தினை ஏற்பாடு செய்துள்ளனர். இந்த போட்டிகளில் பங்கேற்கும் வகையில் டாடாவின் பிரைமா லாரிகள் மாற்றியமைக்கப்பட்டிருக்கும். டாடாவின் T1 Racer Program (TRP 2.0) கீழ் 1000த்துக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் இந்தியாவிருந்து வந்துள்ளதாக டாடா தெரிவித்துள்ளது.இவற்றில் இருந்து 10 டிரக் டிரைவர்களை தேர்ந்தெடுத்து அவர்கள் பங்கேற்கும் வகையிலான பயிற்சினை வழங்கி வருவதாக தெரிவித்துள்ளது. முதல் இருவருடங்களாக இந்திய டிரைவர்கள் எவரும் பங்கேற்காத நிலையில் இந்திய டிரைவர்களுக்கு சிறப்பு…
கடந்த ஜனவரி 2017ல் மாதந்திர விற்பனை முடிவில் இந்தியளவில் விற்பனையில் முன்னிலை வகித்த டாப் 10 பைக்குகள் பற்றி இந்த செய்தியில் அறிந்து கொள்ளலாம். முதலிடத்தில் ஹீரோ ஸ்பிளென்டர் பைக் உள்ளது. 125சிசி பைக் வரிசையில் ஹோண்டா சிபி ஷைன் பைக் முன்னிலை வகிகப்பதனை தொடர்ந்து ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 350 புல்லட் 39,391 மாடல்கள் விற்பனை செய்யப்பட்டு பட்டியலில் 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்த வீழ்ச்சியிலே உள்ளதை உறுதி செய்கின்றது. முழுமையான பட்டியலை கீழுள்ள அட்டவனை தொகுப்பில் காணலாம். டாப் 10 பைக்குகள் – ஜனவரி 2017 வ.எண் மாடல் விபரம் ஜனவரி 2017 1 ஹீரோ ஸ்பிளென்டர் 208512 2 ஹீரோ HF டீலக்ஸ் 122202 3 ஹோண்டா CB ஷைன் 70294 4 ஹீரோ பேஸன் 56335 5 ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 39391 6…
டாடா மோட்டார்சின் சிறிய ரக காராக வரவுள்ள டாடா சி-க்யூப் கான்செப்ட் கார் மாடலை Future Decoded 2017 அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மைக்ரோசாஃப்ட் சார்பில் மும்பையில் நடந்து வரும் கண்காட்சியில் C-க்யூப் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. டாடா சி-க்யூப் டாடா நிறுவனம் சமீபத்தில் உருவாக்கி உள்ள டாமோ பிராண்டில் வரவுள்ள முதல் காரினை 87வது ஜெனிவா மோட்டார் ஷோ அரங்கில் காட்சிப்படுத்த உள்ள நிலையில் இந்த மூன்று கதவுகளை கொண்ட சிறிய ரக மாடலை அறிமுகம் செய்துள்ளது. முகப்பில் ஹெக்ஸா மற்றும் டியாகோ கார்களை போன்ற கிரில் அமைப்புடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்த மாடலில் பின்புறம் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கலாம் என தெரிகின்றது. மேலும் இது நானோ காருக்கு மாற்றானதாக அமையும் வாய்ப்புகளும் உள்ளது. இதுகுறித்தான அதிகார்வப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகிவில்லை.. சமீபத்தில் டாடா-மைக்ரோசாஃப்ட் கூட்டணியில் கார்களுக்கு இடையிலான தொடர்பினை ஏற்படுத்தும் வகையிலான நுட்பத்திற்கு புரிந்துணர்வு ஓப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் டாமோ பிராண்டில் புதிய மாடல் மார்ச் 7ந் தேதி…