இந்தியாவில் லம்போர்கினி அவென்டேடார் S ஸ்போர்ட்ஸ் கார் மார்ச் 3ந் தேதி விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. முந்தைய அவென்டேடார் மாடலை விட கூடுதலான பவர் மற்றும் சிறப்பான ஏரோடைனமிக்ஸ் பெற்றதாக அவென்டேடார் S விளங்குகின்றது. லம்போர்கினி அவென்டேடார் S சமீபத்தில் சர்வதேச அளவில் விற்பனைக்கு வெளியிடப்பட்ட அவென்டேடார் எஸ் இந்தியாவிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. முந்தைய லம்போர்கினி கார்களின் வரிசை போன்று LP வார்த்தையை பெறாமல் எஸ் என்ற வார்த்தை மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது. முந்தைய எஞ்சினை லம்போர்கினி அவென்டேடார் எஸ் பெற்றிருந்தாலும் 40 ஹெச்பி கூடுதலான பவரை வெளிப்படுத்தும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ள 6.5 லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டு 740 ஹெச்பி பவர் , 690 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும். இதில் 7 வேக ஆட்டோ கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டு ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனை பெற்று விளங்குகின்றது. 0 முதல் 100 கிமீ வேகத்தை வெறும் 2.9 விநாடிகளில் எட்டிவிடும். அவென்டேடார் எஸ் அதிகபட்ச வேகம்…
Author: MR.Durai
மஹிந்திரா குழுமத்தின் அங்கமான கொரியாவின் சாங்யாங் நிறுவனத்தின் சாங்யாங் XAVL எஸ்யூவி கான்செப்ட் டீஸர் படம் வெளியிடப்பட்டுள்ளது. 2017 ஜெனிவா மோட்டார் ஷோ அரங்கில் முதன்முறையாக XAVL கான்செப்ட் பார்வைக்கு வரவுள்ளது. சாங்யாங் XAVL வருகின்ற மார்ச் 9ந் தேதி தொடங்க உள்ள 87 ஆம் ஆண்டு 2017 ஜெனிவா மோட்டார் ஷோ அரங்கில் எண்ணற்ற புதிய கான்செப்ட் மாடல்கள் மற்றும் உற்பத்தி நிலை மாடல்களும் காட்சிக்கு வரவுள்ளது. சமீபத்தில் சாங்யாங் வெளியிட்டுள்ள எக்ஸ்ஏவிஎல் எஸ்யூவி டீசர் பற்றி பார்க்கலாம். முந்தைய ஃபிராங்ஃபர்ட் மோட்டார் ஷோ அரங்கில் வெளிவந்த சிறிய ரக XAV எஸ்யூவி கான்செப்ட் மாடலை அடிப்பையாக கொண்ட XAVL (eXciting Authentic Vehicle Long) கான்செப்ட் மாடலில் 7 இருக்கை ஆப்ஷன்னுடன் பல்வேறு நவீன வசதிகளை கொண்ட காராக 2019 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 1990 ஆம் ஆண்டு வெளிவந்த இரண்டாம் தலைமுறை கோரான்டோ எஸ்யூவி மாடலை அடிப்படையாக கொண்ட XAVL…
வருகின்ற மார்ச் மாதம் தொடங்க உள்ள 2017 ஜெனிவா மோட்டார் ஷோ அரங்கில் காட்சிப்படுத்தும் நோக்கில் டொயோட்டா i-TRIL தானியங்கி கார் டீஸர் படத்தை டொயோட்டா வெளியிட்டுள்ளது. i-TRIL கான்செபட் எதிர்கால ஆட்டோமொபைல் சார்ந்த தேவைக்கு ஏற்ற மாடலாக இருக்கும். டொயோட்டா i-TRIL வருகின்ற மார்ச் 9ந் தேதி தொடங்க உள்ள 87 ஆம் ஆண்டு 2017 ஜெனிவா மோட்டார் ஷோ அரங்கில் எண்ணற்ற புதிய கான்செப்ட் மாடல்கள் மற்றும் உற்பத்தி நிலை மாடல்களும் காட்சிக்கு வரவுள்ளது. சமீபத்தில் டொயோட்டா வெளியிட்டுள்ள ஐ -டிரில் டீசர் பற்றி பார்க்கலாம். நகர பயன்பாட்டுக்கு ஏற்ற சிறிய கார் , எலக்ட்ரிக் கார் மற்றும் மோட்டார்சைக்கிள் போன்றவற்றுக்கு மாற்றாக குறைந்த வேகத்தின் சிறப்பான அனுபவத்தினை வழங்கும் மாடலாக i-TRIL விளங்கும் என டொயோட்டா தெரிவித்துள்ளது. அனேகமாக இந்த கான்செப்ட் மாடல் மூன்று சக்கரங்களை கொண்ட 3 இருக்கை அமைப்புடன் சிறப்பான வசதிகளுடன் நகரங்களுக்குள் பயணிக்கும் வகையிலான…
இந்தியாவின் முதன்மையான வாகன தயாரிப்பாளராக விளங்கும் மாருதி சுஸூகி நிறுவனத்தின் மாருதி SHVS மைல்ட் ஹைபிரிட் சிஸ்டம் கொண்ட சியாஸ் எஸ்ஹெச்விஎஸ் மற்றும் எர்டிகா எஸ்ஹெச்விஎஸ் மாடல்கள் விற்பனை எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளது. மாருதி SHVS கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் விற்பனையில் உள்ள மாருதி SHVS நுட்பமானது முதன்முறையாக சியாஸ் காரில் அறிமுகம் செய்யப்பட்டது. சிறப்பான எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் நோக்கில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த நுட்பமானது வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று விளங்குகின்றது. மேலும் இந்திய அரசின் FAME திட்டத்தின் கீழ் சிறப்பு மானியமும் இந்த கார்கள் வழங்கப்படுகின்றது. SHVS என்றால் என்ன என்பதனை நாம் முன்பே விளக்கமாக பார்த்திருந்தாலும் சுருக்கமாக இங்கே காணலாம்… Smart Hybrid Vehicle by Suzuki (SHVS) SHVS ஹைபிரிட் நுட்பத்தினை மாருதி இன்ட்கிரேட்டடு ஸ்டார்டர் ஜெனரேட்டர் ( IGS-Integrated Starter Generator )என அழைக்கின்றது.…
வருகின்ற பிப்ரவரி 23ந் தேதி 2017 கேடிஎம் டியூக் அணிவரிசை விற்பனைக்கு வரவுள்ள நிலையில் இந்த வரிசையில் கேடிஎம் 250 டியூக் மாடலும் விற்பனைக்கு வரலாம் என தகவல்கள் வெளிவந்துள்ளது. கேடிஎம் 250 டியூக் 390 டியூக் பைக்கினை போன்ற தோற்ற அமைப்பினை பெற்று விளங்கும் மாடலான டியூக் 250 டீலர்கள் வசம் உள்ள படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த பைக்கில் 248.8 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு 31 ஹெச்பி பவருடன் , 24 Nm டார்க் அதிகபட்சமாக வெளிப்படுத்தும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு சிலிப்பர் கிளட்ச் வசதியுடன் கிடைக்கின்றது. இந்தியாவில் விற்பனையில் உள்ள டியூக் 200 மற்றும் டியூக் 390 பைக்குகளுக்கு இடையிலான விலையில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. புதிய டியூக் 390 போன்ற இரட்டை பிரிவு எல்இடி விளக்குகள் , ரைட் பை வயர் போன்ற வசதிகள் இதில் இல்லை. மேலும் 390 பைக்கில் டிஎஃப்டி திரை…
வருகின்ற பிப்ரவரி 23ந் தேதி கேடிஎம் டியூக் பைக்குகள் இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. பல்வேறு புதிய வசதிகளை கொண்ட 2017 கேடிஎம் 390 டியூக் மற்றும் புதிய கேடிஎம் 200 டியூக் மாடலும் விற்பனைக்கு வரவுள்ளது. 2017 கேடிஎம் டியூக் சில வாரங்களுக்கு முன்னதாக கூடுதலான வசதிகளை கொண்ட 2017 கேடிஎம் ஆர்சி வரிசை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து புதிய டியூக் வரிசையும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. கடந்த இஐசிஎம்ஏ 2016 அரங்கில் வெளிவந்த 2017 390 டியூக் பைக்கில் முகப்பில் இரட்டை பிரிவுகளை முழு எல்இடி ஹெட்லேம்ப் பெற்றுள்ளது. மிக சிறப்பான ஸ்போர்ட்டிவ் பெட்ரோல் டேங்க் மற்றும் டிசைன் வடிவத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் வந்துள்ள நிலையில் முகப்பில் இரட்டை பிரிவுகளை முழு எல்இடி ஹெட்லேம்ப் பெற்றுள்ளது. மிக சிறப்பான ஸ்போர்ட்டிவ் பெட்ரோல் டேங்க் மற்றும் டிசைன் வடிவத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 390 பைக்கில் டிஎஃப்டி திரை ,…